Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'இந்தியாவின் ராமர்களும்…மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' – ஓர் அலசல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
'இந்தியாவின் ராமர்களும்…மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' – ஓர் அலசல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில் திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், ‘எலான் மஸ்க் இப்போதுதான் பறக்கும் காரை கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் கார் இருந்திருக்கிறது’ எனப் பேசியிருக்கிறார்.

ராமாயணம்
ராமாயணம்

ராமாயணம் போன்ற புராதனப் படங்களை எடுக்க நினைப்போரின் நோக்கம் மக்களுக்கு ஒரு இதிகாச அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி திரைக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கு உதவ வேண்டும் என்பதாக உருமாறி நிற்கிறதோ எனும் ஐயப்பாடு எழுவதை தவிர்க்கவே முடியவில்லை. அதுவும் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசின் பெரும்பான்மை மதவாத வலதுசாரி அரசியலுக்கு ஆதரவாக எக்கச்சக்கமான திரைப்படங்கள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு படத்தை வெறும் படமாக மட்டுமே அணுகுவது மேம்போக்கான பார்வையாகவே இருக்கும்.

பாஜக கடவுள்களையும் ஆலயங்களையும் மையப்படுத்தி அரசியல் செய்து வளர்ந்தக் கட்சி. பெரும்பான்மையான இந்து மதம் இங்கே ஆபத்தில் இருக்கிறது என்கிற உணர்வெழுச்சியை தூண்டி வளர்ந்த கட்சி. எப்படி தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மேடை நாடகங்களும் திரைப்படங்களும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் பாஜகவின் வலதுசாரி சிந்தாந்த வளர்ச்சிக்கும் கலைவடிவங்கள் பயன்பட்டிருக்கின்றன. இந்துத்துவ அமைப்புகள் ராமரை நாயகனாக முன்னிறுத்தி பாபர் மசூதியை நோக்கி தங்களின் பார்வையை கூர்மையாக்கிய காலக்கட்டத்தில்தான் தூர்தர்ஷனில் முதல் முறையாக ராமாநந்த் சாகரின் ‘ராமாயணம்’ தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பொதிகை தொலைக்காட்சி

தூர்தர்ஷனில் ராமாயணம் தொடரை ஒளிபரப்பலாம் எனும் முடிவை எடுத்தது ராஜீவ் காந்தி அரசு. வாக்குவங்கி அரசியல் கணக்குகளுக்காக ராஜீவ் காந்தி ராமாயணத்தை கையிலெடுத்தார். ஆனால், அந்த ராமாயணம் தொடர் வலதுசாரிகளின் வேலையை மிச்சப்படுத்தியது. அவர்கள் பெரும் பிரசாரம் செய்து தேசம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய செய்தியையும் தூண்டிவிட வேண்டிய உணர்வெழுச்சியையும் ராமாயணம் தொடரே செய்து முடித்தது. 78 எபிசோடுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் ஒளிபரப்பாகிய அந்தத் தொடரை டிவியில் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடினர். தொலைக்காட்சியை தொட்டு வணங்கி தொலைக்காட்சிப் பெட்டிக்கு மாலை போட்டு வணங்கி ராமரை தங்களின் ஆதர்ச கடவுளாக மக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தி பேசும் மாநிலங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ராமஜென்ம பூமி இயக்கத்துக்கும் ரத யாத்திரைக்குமான ஏற்பை மக்கள் மத்தியில் உருவாக்க ராமாயணத் தொடர் பேருதவி புரிந்தது. ‘ராமாயணத் தொடரின் மூலம் மத உணர்வு நவீன தொழில்நுட்பத்தின் வழியே மக்களின் வரவேற்பறைக்கு வந்தது. மதச்சார்பற்ற இந்திய அரசு உருவாக்கிய இந்த ஊடகத் தளத்தை, வலதுசாரிகள் மிகச் சரியாகப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டனர்’ என தனது ‘Politics after Television – Hindu Nationalism – and the Reshaping of the Public in India’ என்கிற புத்தகத்தில் ஆய்வாளர் அரவிந்த் ராஜகோபால் குறிப்பிட்டிருப்பார்.

இந்துவாக ஒன்றிணைதல், இந்து தேசியவாதம் என்கிற கருத்துகளுக்கு ராமாயணம் தொடர் மூலம் மிக வேகமாக வடிவம் கொடுக்கப்பட்டது. அத்வானியின் ரத யாத்திரையில் பயன்படுத்த ரதம் ராமாயணம் தொடரில் பயன்படுத்த ரதத்தை ஒத்ததாக இருந்தது. ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் நடிகைகள் திரைக்கு வெளியே ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு ஆதரவாக நின்றனர். ‘இந்தியாவில் மக்கள் ஆன்மீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் எந்தளவிற்கு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணத் தொடர் அசைக்க முடியாத அளவுக்கு நிரூபித்துக் காட்டியது. ஞாயிற்றுக்கிழமை காலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தொலைக்காட்சி முன்பு ஒன்றிணைவது, சமுதாயத்தில் ஒரு புதிய ‘கலாச்சார தேசியவாதத்தின்’ எழுச்சியை உணர்த்துகிறது.” எனப் பெருமிதப்பட்டு பேசியிருக்கிறார் ரத யாத்திரையை முன்னின்று நடத்திய எல்.கே.அத்வானி.

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஆராய்ச்சி நிறுவனமான NBER (National Bureau of Economic Research) இந்தியாவில் இராமயண தொடர் சமூக அரசியல்ரீதியாக ஏற்பட்ட தாக்கத்தை தரவுகளோடு எடுத்து ஆய்வு செய்து கடந்தாண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி இராமயணம் தொடர் அதிக பார்வையாளர்களை கொண்டிருந்த பகுதிகளில் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முறை ராமாயணத்தை ஒத்ததாக மாறியிருக்கிறது. இந்து – முஸ்லீம் முரண்பாடுகள் அதிகமாகியிருக்கிறது. மேலும், தேர்தல்களிலும் குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் பாஜக நீடித்த செல்வாக்கைப் பெற்றிருக்கிறது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 90 களின் கடைசிக்குப் பிறகும் பல முறை ராமாயணம் தொடர் தூர்தர்ஷனில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. ராமாயணத்தைப் போலவே மகாபாரதமும் தொடராக எடுக்கப்பட்டது. இதெல்லாமே களத்தில் பாஜக கையிலெடுத்திருக்கும் வேலையை சுலபப்படுத்தும் காரணிகளாகவே இருந்தன. நீண்ட காலம் கழித்து கொரோனாவின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் திக்கற்று நின்ற போது, அந்த சமயத்தில் தூர்தர்ஷனில் ராமாயணத்தை மறு ஒளிபரப்பு செய்து பெருமிதப்பட்டது பாஜக அரசு. அத்தோடு ஒரே நேரத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரை அதிகம் பேர் பார்வையிட்டதும் இராமாயணம் தொடர்தான் எனும் சாதனையும் செய்யப்பட்டதாக கூறினர். இந்தப் பின்னணியில்தான் சமகாலத்தில் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் படங்களையும் அளவிட வேண்டும்.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒரு சமூகத்தின் சமகால அரசியல் தேர்வும் விருப்பமும் பிரச்னைகளும் அந்தந்த காலத்திய திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுவதே எப்போதும் பார்க்க முடியும். சந்தை பொருளாதாரத்தில் பெரும்பான்மை மக்களின் எண்ணவோட்டத்தோடு ஒத்துப்போகும் வணிகரீதியான யுக்தி இது. அந்தவகையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்றாவது முறையாக என வலுவாக காலூன்றிய காலத்தில் இங்கே தொடர்ந்து வலதுசாரி ஆதரவுப் படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

ராமாயணம் பாஜக திட்டமிட்டு ஒளிபரப்பிய தொடர் அல்ல. ஆனால், அதன் பலன்களை அறுவடை செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டது. அந்த ராமாயண பார்முலாவைத்தான் இப்போதும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனரIndia – The Modi Question என குஜராத் கலவரத்தின் போது மோடி ஒரு முதலமைச்சராக எப்படி செயல்பட்டார் என்பதை பிபிசி ஒரு ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தின் திரையிடல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இணையத்தில் அந்த ஆவணப்படத்தின் காட்சிகள் தேடித்தேடி நீக்கப்பட்டன. ஒரே காரணம், பாஜக அரசுக்கும் மோடிக்கு சங்கடம் விளைவிக்கக் கூடிய விஷயங்கள் அதில் இருந்தன. இப்படியொரு ஆவணப்படம் வெளியாகி சரியாக ஒன்றரை வருடத்தில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என ஒரு திரைப்படம் வெளியாகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்டச் சதி என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதன்பிறகான கலவரங்களை பெரிதாக பேசாமல் விட்டு தங்களின் கருத்தாக்கத்துக்கு உதவிய அந்தப் படத்தை மோடியே வெகுவாக பாராட்டினார். காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி, ஆர்ட்டிக்கிள் 370 என பிரதமர் மோடி பாராட்டி விமர்சனம் கொடுத்த அத்தனை படங்களும் வலதுசாரி கருத்தியலுக்கு வலுவூட்டியவை. அதற்கும் மேல் அவை பாதி உண்மையை அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் ஒரு பக்கத்தின் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சி இன்னொரு பக்கத்தை வில்லனாக சித்தரித்த படங்கள். இப்படியாக எடுக்கப்படும் படங்களை பாஜகவினரும் இந்துத்துவ அமைப்பினரும் உடனடியாக தங்களின் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதோடு அரசியல் அங்கீகாரம் வரிவிலக்கு, தேசிய விருதுகள் என சலுகைகளையும் அள்ளிக் கொடுக்கின்றனர்.

மோடி
மோடி

விளைவு, தற்போது பேசப்பட்டு வரும் ‘பான் இந்தியா’ வகைப் படங்களின் மையமே ஆன்மீகம் சார்ந்ததாகவும் வலதுசாரி அரசியல் ஏற்பையும் கொண்டதாகவே இருக்கின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘RRR’ படத்தில் ஹீரோவான ராம் சரண் கடைசியில் லாஜிக்கே இல்லாமல் காவி உடை தரித்து ராமர் அவதாரம் எடுத்து ஆங்கிலேயர்களை வீழ்த்தி தேசத்தை காப்பாற்றுவார். ‘Chhaava’ என்றொரு படம் கடந்தாண்டு வெளியானது. ஒளரங்கசீப்புக்கு எதிராக சண்டையிட்டு வீழ்ந்த சத்ரபதி சம்பாஜி மகாராஜரை பற்றிய படம் அது. சம்பாஜி தனது மதஅடையாளத்தையும் பாரம்பரியத்தயும் விட்டுக்கொடுத்து மண்டியிட மாட்டேன் என உறுதியாக நின்று ஒளரங்கசீப்பின் சித்ரவதைகளால் வீழ்ந்த காட்சிகள் உணர்ச்சியை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

படம் வெளியாகி ஹிட்டடித்த ஒரே மாதத்தில் குல்தாபாத்தில் இருக்கும் ஒளரங்கசீப்பின் கல்லறையை உடைத்து அகற்ற வேண்டுமென இந்துத்துவ அமைப்புகள் கொடிபிடித்து கலவரத்தில் ஈடுபட்டனர். Chhaava படத்தை பார்த்து ‘மிக அழகான படம்’ எனப் பாராட்டிவிட்டு, ‘Chhaava படம் ஒளரங்கசீப்புக்கு எதிரான கோபத்தை தூண்டிவிட்டிருக்கலாம்’ என சட்டசபையிலும் பேசினார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த துரந்தர் படமும் பாகிஸ்தானை வில்லனாகக் காட்டி மோடியின் சௌகிதார் இமேஜூக்கு வலுவூட்டக் கூடியதாகவே இருந்தது. இந்துவாக ஒன்றிணையும் இந்து தேசியவாதத்தையும் அந்த தேசியத்தின் காவலர்களாக பாஜகவையும் மோடியையும் சித்தரிக்கும் வேலைகளை இந்த மாதிரியான படங்கள் நூதனமாக செய்துவிடுகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரபாஸ் நடிப்பில் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஆதிபுருஷ்’, இப்போது வெளியாகியிருக்கும் ‘ராமாயணம்’ எல்லாமே இந்த ரகம்தான் அல்லது இவற்றை தங்களுக்கானதாக வரிந்து பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் எடுத்துக் கொள்ளும். தேர்தல்கள் நெருங்க நெருங்க இதேபோன்ற படைப்புகள் இன்னும் அதிகமாகக் கூட வெளியாகும். பெரிதாக எந்த சார்பும் இல்லாத பெருவாரியான வாக்காளர்களின் மனங்களிலும் இதேமாதிரியான பிரசாரப் படங்கள் எதோ ஒரு மூலையில் ஒரு குண்டூசியை கொண்டு குத்தும் அளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

வலதுசாரி ஆதரவு படக்குவியலின் சமீபத்திய இணைவுதான் இந்த ராமாயணமும். ரிலீஸூக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அமெரிக்காவில் போய் ஷோ ஓட்டிக் காட்டி இதுதான் இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு என பெருமிதப்பட்டு வந்திருக்கிறது படக்குழு. ஜந்தர் மந்தரை அரசுக்கு எதிரான தீவிர போராட்டக்களமாக இளைஞர்கள் மாற்றியிருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்த ராமாயணம் படத்துக்கு கிடைக்கப்போகும் விமர்சனங்களும் ஏற்பும் எதிர்ப்பும் தேசத்துக்கு முக்கிய செய்தியை சொல்லக்கூடியதாக கூட இருக்கலாம். ஏனெனில் இதற்கு முன்பும் அப்படி இருந்திருக்கின்றது. கலைகள் மூலம் சொல்லப்படும் செய்திகள் ‘கலை மக்களை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். மாறாக பிளவுப்படுத்தக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.



.

Previous Post

"E20 420 ஆக மாறிவிட்டது; நீங்கள் ஆசையாக வாங்கிய கார் பாழாகிறது" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Next Post

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" – திருமாவளவன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" – திருமாவளவன்

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" - திருமாவளவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In