Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" – ராகுல் காந்தி எதிர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2026
in அரசியல் செய்திகள்
0
"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" – ராகுல் காந்தி எதிர்ப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இனி அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைத் தாண்டி, வாக்காளர் அட்டை வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

ஆபத்தான சதித்திட்டம்

“நலத்திட்டங்களுக்கான தகுதியை இனி ஆதார் அடிப்படையில் தீர்மானிக்காமல், வாக்காளர் அடையாள அட்டை மூலம் தீர்மானிக்கப் போவதாக மோடி அரசின் அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான ஒரு சதித்திட்டம். சற்று நிதானமாக யோசித்து இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆதார் அடையாள அட்டை (For Representation)
ஆதார் அடையாள அட்டை (For Representation)
பெரியார் நூலக விவகாரம்: “போலி நூல்களை வீதியில் கொட்டி எரியுங்கள்” – கமல்ஹாசன் காட்டம்

எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுக்காவிட்டால், இன்னும் பல பெயர்கள் நீக்கப்படும்.

அப்படி நீக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் யார்? பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் மக்கள்தான்.

மோடி அரசின் ஊழியரான ஞானேஷ் குமார்

வாக்காளர் பட்டியல் என்பது நடுநிலையான தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது அது மோடி அரசின் ஊழியரான ஞானேஷ் குமாரின் கைகளில் இருக்கிறது.

பாஜகவுடன் இணைந்து வாக்காளர் தில்லுமுல்லுவில் அவர் ஈடுபட்டதை ஆதாரத்துடன் நாம் கையும் களவுமாகப் பிடித்துள்ளோம்.

எப்போதும் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் ஒரு பட்டியலைத் தயாரிக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். இப்போது அதே பட்டியல்தான் உங்களுக்கு நலத்திட்ட உதவி கிடைக்குமா கிடைக்காதா என்பதையும் தீர்மானிக்கப் போகிறது.

வாக்கு போச்சு

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நேற்று முடிவு செய்த எவரொருவரின் பெயரும், ஒவ்வொன்றாகப் பட்டியலில் இருந்து தூக்கப்படும்.

பெயர் நீக்கப்பட்டால் வாக்கு போச்சு. வாக்கு போனால் — உரிமைகள் போச்சு.

मोदी सरकार के मंत्री का ऐलान – योजनाओं का लाभ अब आधार से नहीं, वोटर ID से तय होगा।

साजिश बहुत गहरी है, इत्मीनान से समझिए।

SIR के नाम पर करोड़ों नाम वोटर लिस्ट से काटे जा रहे हैं – रोका नहीं गया तो और भी काटे जाएंगे।

ज़्यादातर नाम किनके? जो BJP के ख़िलाफ़ आक्रोश में हैं।

वोटर लिस्ट एक निष्पक्ष चुनाव आयोग के हाथ में होनी चाहिए – मगर अब वो मोदी सरकार के कर्मचारी, ज्ञानेश कुमार के हाथ में है, जिसकी BJP के साथ मिलीभगत में वोट चोरी हमने सबूत के साथ पकड़ी है।

तैयारी है ऐसी लिस्ट बनाने की जिसमें बहुमत हमेशा BJP का हो – और अब वही लिस्ट तय करेगी कि आपको योजना का पैसा मिलेगा या नहीं।

कल जिसने भी ठाना कि BJP को हटाना है, तो चुन-चुन कर सबका नाम काटा जाएगा।

नाम कटा – वोट गया। वोट गया – हक़ गया।

और देखते ही देखते आप एक hijacked लोकतंत्र के अदृश्य नागरिक बन जाएंगे – जहां जनता सरकार नहीं चुनेगी, सरकार अपनी जनता चुनेगी।

आज पंचायती राज की योजनाएं। कल राशन? पेंशन? मनरेगा? आवास? छात्रवृत्ति? आरक्षण?

यह चुनाव जीतने की राजनीति नहीं, चुनाव चोरी का इंतज़ाम और सत्ता में बने रहने का स्थायी बंदोबस्त है।

वोट देना आपका अधिकार है, शर्त नहीं। किसी ग़रीब की पेंशन उसके वोटर कार्ड की ग़ुलाम नहीं हो सकती।

ये सिर्फ़ वोट चोरी नहीं – ये हक़ चोरी है।

हम ये होने नहीं देंगे।

— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2026

அடுத்த கணம் யோசிப்பதற்குள், கடத்தப்பட்ட ஒரு ஜனநாயகத்தின் கண்ணுக்குத் தெரியாத குடிமகனாக நீங்கள் மாறியிருப்பீர்கள். அங்கு மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அரசுதான் தன் மக்களைத் தேர்ந்தெடுக்கும்!

அடுத்து என்ன?

இன்று பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள். நாளை ரேஷனா? ஓய்வூதியமா? 100 நாள் வேலைத் திட்டமா? இலவச வீடுகளா? கல்வி உதவித்தொகையா? இடஒதுக்கீடா?

இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அரசியல் அல்ல. தேர்தலையே திருடுவதற்கான ஏற்பாடு. நிரந்தரமாக அதிகாரத்திலேயே நீடிப்பதற்கான ஒரு சதித்திட்டம்.

வாக்களிப்பது உங்கள் உரிமை, அது ஒரு நிபந்தனை அல்ல. ஒரு ஏழையின் ஓய்வூதியம் அவரது வாக்காளர் அட்டையைப் பிணையாக வைத்துத் தடுக்கப்படக் கூடாது.

இது வெறும் வாக்கு திருட்டு மட்டுமல்ல. உரிமைகளின் திருட்டு.

இதை நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”

ட்ரம்ப் கட்சி தோல்வி: “மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன” – ப.சிதம்பரம் பதிவு



.

Previous Post

பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் ஊழல் புகார்: சு.வெங்கடேசன்|‘Fake Books Must Go’: Su Venkatesan on Periyar Arivulagam Row

Next Post

ஏ.ஐ பங்குகள் சரிவு: ‘சூப்பர் இன்டெலிஜென்ஸுக்கு ஆதரவு’ – ட்ரம்ப்|‘Super Intelligence Is Priceless’: Trump Defends AI Amid Stock Market Rout

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏ.ஐ பங்குகள் சரிவு: ‘சூப்பர் இன்டெலிஜென்ஸுக்கு ஆதரவு’ – ட்ரம்ப்|‘Super Intelligence Is Priceless’: Trump Defends AI Amid Stock Market Rout

ஏ.ஐ பங்குகள் சரிவு: 'சூப்பர் இன்டெலிஜென்ஸுக்கு ஆதரவு' - ட்ரம்ப்|‘Super Intelligence Is Priceless’: Trump Defends AI Amid Stock Market Rout

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In