அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போது ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“சட்டவிரோதக் குடியேற்றம், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் ஊடுருவல், இஸ்லாமோபோபியா (இஸ்லாமியப் பயம்) சார்ந்த வெறுப்புப் பிரசாரங்கள் போன்ற பலவிதமான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில்தான் அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.

இன்னொரு பக்கம், வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகள் மக்களை அமுக்கிவிடுவது போல் அச்சுறுத்தின.
இறுதியில், தாராளமயம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக உணர்வும் ஆன்மாவும்தான் வெற்றி பெற்றுள்ளன.
ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டில் குடிமக்களாக வாழ விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம்.
