Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்! |“New Secretariat in Pattinapakkam!” – Is CM Vijay Firm on the Location?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2026
in அரசியல் செய்திகள்
0
'நான் முதல்வர் விஜய்யை பாராட்டவே இல்லை!' – வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மீனவ கிராமத்துக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை அங்கிருக்கும் 12 மீனவ கிராமத்தினரும் விரும்பவில்லை. குறிப்பிட்ட அந்த இடத்தில் மீனவர்கள் குடியிருப்பு கட்ட வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை நிறைவேற்றாமல் புதிய தலைமைச் செயலகம் என அரசு இறங்குவது மீனவர்களை கோபப்படுத்தியிருக்கிறது.

மேலும், அங்கே தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களின் மீன்பிடி தொழிலே பாதிக்கப்படும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசைக் கண்டித்து தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மீனவ கிராம மக்கள் எல்லாரும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தனர். இந்த வாரத்தில் கூட அரசு முறையாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தாமல் போக்கு காட்டுவதாக கண்டனம் தெரிவித்தனர். அதுதொடர்பாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்துக்காக அரசு ஒரு பிடி நிலத்தை கையிலெடுத்தாலும் மீனவ கிராமங்கள் அத்தனையும் போராட்டத்தில் இறங்குவோம்’ என்றனர்.

பட்டினப்பாக்கம் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என கோட்டையில் முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் மட்டுமே தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பதில் முதல்வர் தரப்பு அப்படியே உறுதியாக இருக்கிறது. பட்டினப்பாக்கத்துக்கு பதில் கிண்டி, பல்லவன் இல்லம் என வெளியான செய்திகளிலெல்லாம் உண்மையே இல்லை. இப்போது வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் திட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்றுதான் ஆலோசித்து வருகிறோம்’ என்றனர்.



.

Previous Post

ஆந்திரா கொத்தபுரம் கடற்கரையில் 4 உடல்கள் கரைஒதுங்கின: மாயமான காசிமேடு மீனவர்களா? அதிர்ச்சியில் குடும்பத்தினர்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In