Last Updated:
ஆந்திர கடற்கரையில் 4 பேரின் உடல்கள் கரைஒதுங்கியுள்ளன. இவை மாயமான தமிழக மீனவர்களின் உடல்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், 4 மீனவர்களின் உடல்கள் ஆந்திராவில் கோட்டகுப்பம் பகுதியில் கரைஒதுங்கின.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கொத்தாபுரம் கடற்கரையில் இன்று 4 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கரை ஒதுங்கிய இந்த உடல்கள், கடந்த 29-ஆம் தேதி மாயமான தமிழக மீனவர்களின் உடல்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.
முன்னதாக ‘முரசு’ புயல் காரணமாக கடலில் சிக்கி, காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாட்களாக மாயமாகியிருந்தனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆந்திரக் கடற்கரையில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகு, கொத்தாபுரம் கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து மீன்பிடி படகு கொத்தாபுரம் கடற்கரைக்கு இழுத்துவரப்பட்டது.

