Last Updated:
அரியானாவில் பள்ளியில் சிறுமி மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 8 வயது மாணவனுக்குச் சீரார் சீர்த்திருத்த வாரியம் ஜாமீன் வழங்கியது.
அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் கே.ஜி. வகுப்பு மாணவி வகுப்பறையில் ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ஆசிரியர்கள், மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வகுப்பறை சிசிடிவி கேமிராவின் காட்சியை ஆய்வு செய்ய அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான மாணவன், சிறுமியைக் கடுமையாகத் தாக்குவது பதிவாகி இருந்தது.
மேசையில் தலையை மோதி சிறுமியை நிலைகுலைய வைத்த மாணவன், காலால் சிறுமியின் முகத்தில் எட்டி உதைத்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார். கோரத்தின் உச்சமாக வகுப்பறையில் இருந்த செங்கல்லை தூக்கி, மாணவியின் முகத்தில் பலமுறை போட்டு முகத்தைச் சிதைத்துள்ளார். இக்கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
அதேசமயம், தாக்குதலில் ஈடுபட்ட 8 வயது மாணவனுக்கு அரியானா சிறுவர் சீத்திருத்த வாரியம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவனின் பெற்றோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது எனவும், கவுன்சிலிங் வழங்குவதாகவும், உடல் மற்றும் மன நலனுக்கான அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மகனின் மேற்பார்வைக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தனர். மேலும், மகன் மீது எந்தவொரு குற்றநடவடிக்கையும் இதற்கு முன் பதிவாகவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அரியானா சிறார் சீர்த்திருத்த வாரியம் அச்சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

