Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்… அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா? | Hakeem Jeffries Moves Closer to Speaker Role Amid Changing US Politics

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2026
in அரசியல் செய்திகள்
0
US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்… அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா? | Hakeem Jeffries Moves Closer to Speaker Role Amid Changing US Politics
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதவியை அவர் வகிக்கும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றின் முதல் கறுப்பின சபாநாயகர் என்ற நிலையை எட்டுவார்.

பெரும்பான்மையும் சபாநாயகர் வாய்ப்பும்

நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியதே இந்த எதிர்பார்ப்புக்கு அடிப்படை. அங்கு பெரும்பான்மை பெறும் கட்சி தனது சபாநாயகர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருக்கும் ஜெஃப்ரிஸ், இயல்பாகவே இப்பதவிக்கான முதன்மைத் தேர்வாக உள்ளார்.

 hakeem jeffries

hakeem jeffries
J. Scott Applewhite

சபாநாயகர் வேட்புமனுவுக்குக் கட்சியினரின் ஆதரவைக் கோரி, நவம்பர் 4-ம் தேதி அவர் கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமைத் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தேர்வானாலும், ஜனவரி மாதம் நடைபெறும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பில் 218 வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அவர் அதிகாரபூர்வமாகச் சபாநாயகராக முடியும்.

சட்டத்துறையிலிருந்து நாடாளுமன்றம் வரை

1970-ல் நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்த ஹக்கீம் ஜெஃப்ரிஸ், பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையும் பயின்றவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

 hakeem jeffries

hakeem jeffries
J. Scott Applewhite

2007-ல் நியூயார்க் மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். காவல்துறையின் “ஸ்டாப் அண்ட் ஃபிரிஸ்க்’ (Stop and Frisk) நடவடிக்கையில், குற்றம் சாட்டப்படாதவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்வதற்கு எதிராகச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். தொடர்ந்து 2013-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

அமெரிக்கக் காங்கிரஸில் குற்றவியல் நீதி சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட ‘FIRST STEP Act’ சட்டத்தின் முக்கிய ஆதரவாளராகச் செயல்பட்டார். 2019-ல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், 2023 ஜனவரியில் நாடாளுமன்றத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அமெரிக்கக் கட்சியொன்றின் நாடாளுமன்றத் தலைவரான முதல் கறுப்பினத்தவர் இவர்தான்.

தற்போது அந்தப் பயணம் சபாநாயகர் பதவியை நோக்கி நகர்ந்துள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் அது முக்கிய மாற்றமாக அமையும்.



.

Previous Post

SIR விவகாரம்; ராகுல் காந்தியின் சவாலை ஏற்ற அமைச்சர் அமித்ஷா! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

US Mid-Term Election | VETO அதிகாரம் – அரசியலமைப்பு விதிகள் சொல்வதென்ன? | DECODE

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Mid-Term Election | VETO அதிகாரம் – அரசியலமைப்பு விதிகள் சொல்வதென்ன? | DECODE

US Mid-Term Election | VETO அதிகாரம் - அரசியலமைப்பு விதிகள் சொல்வதென்ன? | DECODE

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In