Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வீடு திரும்பிய ஹரியானா சிறுமி: மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2026
in அரசியல் செய்திகள்
0
வீடு திரும்பிய ஹரியானா சிறுமி: மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 05, 2026 12:15 PM IST

ஹரியானாவில் சக மாணவனின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி, நலமுடன் வீடு திரும்பினார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வீடு திரும்பிய ஹரியானா சிறுமி
வீடு திரும்பிய ஹரியானா சிறுமி

ஹரியானாவில் சிறுவனால் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8 வயது மாணவி வகுப்பறையில் ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ஆசிரியர்கள், மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வகுப்பறை சிசிடிவி கேமிராவின் காட்சியை ஆய்வு செய்ய அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான மாணவன், சிறுமியைக் கடுமையாகத் தாக்குவது பதிவாகி இருந்தது.

மேசையில் தலையை மோதி சிறுமியை நிலைகுலைய வைத்த மாணவன், காலால் சிறுமியின் முகத்தில் எட்டி உதைத்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார். கோரத்தின் உச்சமாக வகுப்பறையில் இருந்த செங்கல்லை தூக்கி, மாணவியின் முகத்தில் பலமுறை போட்டு முகத்தைச் சிதைத்துள்ளார். இக்கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அந்தப் சிறுமி முதலில் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் செக்டர் 6-ல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமிக்கு மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சமூகத்தின் மீது சிறுமிக்கு அச்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். தனது மகளுக்கு இது ஒரு இரண்டாவது பிறப்பு என்றும், காயங்கள் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை எனவும் சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

அமெரிக்கா Vs இந்திய ஜனநாயகம்: மோடியை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி|“This Is How Democracy Should Work”: Congress Leader Takes a Swipe at Modi

Next Post

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In