Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 02, 2026 4:22 PM IST

தற்போது டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 312 ஆகப் பதிவாகி, இந்த ஆண்டின் முதல்முறையாக ‘மிகவும் மோசம்’ (Very Poor) என்ற நிலையை அடைந்துள்ளது

மாதிரி படம்
மாதிரி படம்

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் (NCR) பகுதிகளில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி, பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் எதிர்வரும் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில் கூட நாளின் அனைத்து நேரங்களிலும் பட்டாசு வெடிக்க முடியாது. நீதிமன்றம் விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டின்படி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். கடந்த அக்டோபர் 15, 2025 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட இடங்களை பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்பட்ட ‘நோ-கிராக்கர் சோன்கள்’ (No-Cracker Zones) ஆக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள், ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்கள், முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட அமைதி மண்டலங்கள் (Silence Zones) ஆகியவற்றில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது. இந்தப் பகுதிகளை அதிகாரிகள் முறையாக அடையாளம் கண்டு விழிப்புணர்வுப் பலகைகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் கிடைக்கக்கூடிய சாதாரண பட்டாசுகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது என்றும், பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரியம் (Barium) கலந்த பட்டாசுகள் மற்றும் CSIR-NEERI அமைப்பால் அங்கீகரிக்கப்படாத பாரம்பரிய பட்டாசுகளை விற்கவோ வெடிக்கவோ கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் வைத்துள்ள அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க முடியும் என்பதால், சட்டவிரோதப் பட்டாசுகளின் விற்பனையைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 312 ஆகப் பதிவாகி, இந்த ஆண்டின் முதல்முறையாக ‘மிகவும் மோசம்’ (Very Poor) என்ற நிலையை அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசு மேலும் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் எந்த அளவுக்குச் சரியாக அமல்படுத்துகிறார்கள் என்பதில்தான் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது அடங்கியுள்ளது.



.

Previous Post

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

Next Post

கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு | Photo Album | RSS rally held in Coimbatore; former Union Minister of State L. Murugan participates | Photo Album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு | Photo Album | RSS rally held in Coimbatore; former Union Minister of State L. Murugan participates | Photo Album

கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு | Photo Album | RSS rally held in Coimbatore; former Union Minister of State L. Murugan participates | Photo Album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In