Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்தப் பட்டியல் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். ஆம் ஆத்மி அரசு பஞ்சாப் போதைப்பொருள் பழக்கம், மாநிலத்தின் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண தவறிவிட்டதாக இரண்டு பேரும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இன்று காலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.எல்.ஏ விஜய் பிரதாப் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் ஆம் ஆத்மி கட்சி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் இன்று அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் சிங், ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய சமனாவைச் சேர்ந்த சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனூரில் இருந்து ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்குச் சென்று தங்களை முறைப்படி பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டனர்.

அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மூன்று பேரின் பதவியைப் பறிக்கும்படி சபாநாயகருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குல்தீப் சிங் கூறுகையில்,”பா.ஜ.க ஒரு பழைய இரும்புக்கடை. நிராகரிக்கப்படும் தலைவர்களைத் தங்களது கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது”என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி பேரணி: “நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? ” – விமர்சிக்கும் பாஜக



.

Previous Post

250 கிலோ மீட்டர் வேகம்.. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் உருவாகும் வீடியோ.. எப்போது முதல் இயக்கப்படுகிறது தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In