Last Updated:
சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் உருவாகும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதிவேகப் பயணத்திற்காக புல்லட் ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யும் திறன் கொண்ட இந்த ரயில், மணிக்கு 249 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.
இதில் 7 பெட்டிகள் சாதாரண வகுப்பாகவும், ஒரு பெட்டி எக்ஸிகியூட்டிவ் வகுப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இருக்கைகள், சக்கர நாற்காலி வசதி, நவீன கழிப்பறைகள், வைஃபை பொழுதுபோக்கு வசதி, எல்.சி.டி. திரைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
🚨 First images of India’s bullet train making. 🙌 https://t.co/OE9b2Ig4dx
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 1, 2026
மேம்படுத்தப்பட்ட காற்றியக்க வடிவமைப்பு, திறன்மிக்க இழுவை அமைப்பு மற்றும் மின்சாரத்தை மீண்டும் பயன்படுத்த உதவும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் ஆகியவை புல்லட் ரயிலில் இடம்பெற்றுள்ளன. அதிவேகம், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சிக்கனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாகும் இந்த புல்லட் ரயில் அடுத்தாண்டு சூரத் முதல் பிலிமோரா இடையே இயக்கப்படவுள்ளது.

