Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
“பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக்கு, என்ன தவறு நடந்தது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியவரும். விலைவாசியைக் குறைப்பதற்குப் பதிலாக விலைவாசி உயர்வு குறித்து பேசிய பேராசிரியர் கலையரசன் கைதுசெய்யப்படுகிறார். இந்த ஆட்சியில் வாய்பூட்டுப் போடுகிறார்கள். கைதைத் தவிர வேறு என்ன செய்ய முடிகிறது?

எடப்பாடி பழனிசாமி, தினகரன்
எடப்பாடி பழனிசாமி, தினகரன்

பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்கவிருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. டிடிவி தினகரன் ஏற்கெனவே எங்களோடு நல்ல உறவில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பவேண்டாம்.

2017-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்தவே பலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்கள் கட்சியில் எந்தக் குழப்பமும் விரிசலும் இல்லை. உண்மையான விசுவாசிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். ஆற்றில் நுரை வருவதற்குச் சோப்பும் ஷாம்பூவும்தான் காரணம் என்று அமைச்சர் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது.

நான் முதலமைச்சராக இருந்தபோது, பிரதமர் மோடியைச் சந்தித்துக் கங்கை நதி புனரமைப்பு போலவே காவிரி, பவானிசாகர், நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகள் மற்றும் அணை நீரைச் சுத்திகரிக்க வலியுறுத்தினேன். இதற்காகத் தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 2019-20 நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை அறிவித்தது. ரூ.11,250 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% நிதிப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கியது. ஆனால், முந்தைய அரசும், இந்த அரசும் இத்திட்டத்தில் எவ்விதக் கவனமும் செலுத்தவில்லை. நிதியாண்டு அட்டவணையில் மாற்றமின்றித் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகின்றனர்.

விஜய் - ஸ்டாலின்
விஜய் – ஸ்டாலின்

20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதிநீரைச் சுத்தமாக வழங்க இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் வலியுறுத்தினேன். எப்பொழுதும் மத்திய அரசைக் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டதால் கேட்ட நிதியும் திட்டங்களும் தமிழ்நாட்டிற்கு உடனுக்குடன் கிடைத்தன. அதற்குச் சான்றாக, இந்தியாவிலேயே ஒரே திட்டத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து அடிக்கல் நாட்டியதைக் கூறலாம்.” என்றார்.

“பெண்களே, சிறுமிகளே… உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!”- எடப்பாடி பழனிசாமி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

வங்கி கணக்கில் நாளை ரூ. 2,000 வரவு வைக்க இருக்கிறது மத்திய அரசு! தீபாவளிக்கு முன் பி.எம். கிசான் நிதி விடுவிப்பு | இந்தியா போட்டோகேலரி

Next Post

ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In