Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!’ – கே.என்.நேரு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!’ – கே.என்.நேரு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“இந்த முறையும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை அதிக இடங்களில் சோதனை செய்துள்ளார்கள். என் சகோதரர் மணிவண்ணன் பிஸினஸ் ரீதியாக வைத்துள்ள 2 லேப்டாப்புகளை எடுத்துச் சென்றுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தது உள்ளிட்டவற்றை திசை திருப்பவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம். இது குறித்து, எங்கள் கட்சித் தலைவர் கூறியது சரிதான். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மையப்படுத்தித்தான் இந்தச் சோதனை என நான் நினைக்கவில்லை. நாங்கள் இருந்தால் தி.மு.க வெற்றி பெறும். இல்லையென்றால் தோல்வி அடையும் என்பது அல்ல. மக்கள்தான் முடிவெடுத்து வெற்றி பெற வைப்பார்கள். எங்கள் கட்சித் தலைவர் கூறுவதை தட்டாமல் செய்வதுதான் எங்களுடைய வேலை. நான் மட்டும் தி.மு.க இல்லை. எங்களிடம் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். நான் இல்லை என்றாலும் எங்களுடைய தொண்டர்கள் பணியாற்றி தி.மு.க-வை தேர்தலில் வெற்றி பெற வைப்பார்கள்.

ஏற்கனவே, முன்னால அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்துள்ளார்கள். இன்று என் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளார்கள். திசை திருப்பத்தான் இதை செய்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசுக்கு வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினார்கள். தி.மு.க ஆட்சி கலைந்த பின்பு தற்போது த.வெ.க ஆட்சியில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்கிறார்கள். இது எனக்கு மட்டும்தான். அன்பில் மகேஷ் விவகாரத்தில் புதிதாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. என் வீட்டில் சோதனை செய்தார்கள். சோதனை, கைது உள்ளிட்டவற்றை ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தி.மு.க எப்படி எதிர்கொண்டதோ அதேபோல இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம்.

கே.என்.நேரு இல்லத்தில் ரெய்டு

கே.என்.நேரு இல்லத்தில் ரெய்டு

ஜெயலலிதா எல்லா அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தார்கள். அதை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்று வந்துள்ளோம். அதேபோல, நீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம். உயர்நீதிமன்றம் இந்த லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்ய நாங்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளார்கள். இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். தி.மு.க-வைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி குறித்து கவலைப்படுவது இல்லை. தாராபுரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வந்தோம். அதே போல மதுராந்தகத்திலும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம். ஆளுங்கட்சியின் வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது. நாங்கள் தேர்தலை சந்திக்கும் போதே நம்பிக்கையாக சந்திக்கிறோம். திரைத்துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். தி.மு.க என்றுமே நிலைத்திருக்கும். தி.மு.க-வை எதிர்ப்பவர்கள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், தி.மு.க என்றைக்குமே நிலையாக நிற்கும். சோதனையை தொடர்ந்து கைது இருக்குமா என்கிற கேள்வியை கேட்கிறீர்கள். யூகத்திற்கு எந்த பதிலும் கூற முடியாது” என்றார்.



.

Previous Post

“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வங்கி கணக்கில் நாளை ரூ. 2,000 வரவு வைக்க இருக்கிறது மத்திய அரசு! தீபாவளிக்கு முன் பி.எம். கிசான் நிதி விடுவிப்பு | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வங்கி கணக்கில் நாளை ரூ. 2,000 வரவு வைக்க இருக்கிறது மத்திய அரசு! தீபாவளிக்கு முன் பி.எம். கிசான் நிதி விடுவிப்பு | இந்தியா போட்டோகேலரி

வங்கி கணக்கில் நாளை ரூ. 2,000 வரவு வைக்க இருக்கிறது மத்திய அரசு! தீபாவளிக்கு முன் பி.எம். கிசான் நிதி விடுவிப்பு | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In