Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" –  செல்லூர் ராஜூ கலகல
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வடகிழக்கு பருவமழை காரணமாக‌ திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யலில் நுரை பொங்கி எழுவதாக சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் புதிய விளக்கம் அளித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் ராஜீவ்

இது குறித்து மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உலகமே வியக்கும் வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அவருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்! உலக மக்கள் அனைவரும் குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப் மற்றும் ஷாம்பினால் தான் ஆற்றில் நுரை வருகிறது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். இந்த நாட்டில் எப்படிப்பட்டவர்களையெல்லாம் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது!

நான் அமைச்சராக இருந்தபோது, எகிப்து என்று சொல்வதற்கு பதிலாக ‘ஈஜிப்ட்’ என்று சொன்னதற்காகவே என்னை வைத்து சமூக வலைதளங்களில் கேலி செய்தார்கள். என்னை அப்படி ஓட்டிய இந்த தம்பிகள் மற்றும் இளைஞர்கள் எல்லாம் இப்போது இதைப் பார்த்து பேஸ்புக்கில் என்னென்னவெல்லாம் கலாய்ப்பார்கள் தெரியுமா? இன்னொன்று தெர்மாகோல்… அந்த யோசனையை நானாகப் போடவில்லை. அதிகாரிகள் சொல்லிதான் தெர்மாகோல் விட்டோம். அதையும் கிண்டல் செய்து வைரலாக்கினார்கள். இப்போது யாராவது அந்த அமைச்சரைக் கேள்வி கேட்கிறீர்களா? இப்படிப்பட்டவர்கள்தான் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

தனுஷ்

இன்றைய தேதியில் நடிகர்களின் வருகை அதிகமாக இருப்பது போலத் தெரிந்தாலும், அவர்கள் அனைவரையும் மக்கள் அப்படிப் பார்க்கிறார்களா என்றால் இல்லை. அவர்களை எல்லாம் எம்.ஜி.ஆர் அளவுக்குச் சொல்ல முடியுமா? எம்.ஜி.ஆரின் கால் தூசிக்குக்கூட ஈடாக மாட்டார்கள். எம்.ஜி.ஆரே கூறியிருக்கிறார், `புகழ் என்பது நீர்க்குமிழி போன்றது. அது எழும்பும்போது பெருசாகத் தெரியும், பிறகு அப்படியே மறைந்துவிடும்.’ இந்த நாட்டில் ஒரே ஒரு புரட்சித் தலைவர்தான் உருவாக முடியும். இனிமேல் எவனும் அவரைப் போலப் பிறக்கப்போவதும் இல்லை, அவரைப் போல ஆகப்போவதும் இல்லை.

இப்போதுள்ள முதலமைச்சர் உட்பட எந்த ஒரு நடிகரும் ஏழை, எளிய மக்கள் துன்பப்படும்போது எதுவும் செய்ததில்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக நாட்டில் எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆட்சிக்கு வரலாம். அதைப் பற்றி நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், விஜய் கட்சியின் தொண்டர்கள்தான் இப்போது பயப்படுகிறார்கள். “நமது தலைவரின் புகழோடு நாளைக்கு மற்ற நடிகர்களும் வந்துவிட்டால், நம் தலைவரையும் வெறும் ஒரு நடிகராகத்தானே பார்ப்பார்கள்?” என்று நினைத்து அவர்கள்தான் அச்சப்படுகிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை. தம்பி தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என யார் வந்தாலும் வரட்டும், நல்லதுதானே! இந்த ஆறு மாத காலத்தில் இந்த ஆட்சியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. அந்த விமர்சனங்களை எல்லாம் மறைப்பதற்காகத்தான் “இவரைக் கைது செய்கிறோம், அவரைக் கைது செய்கிறோம்” என்று இப்போது நாடகமாடுகிறார்கள். இந்த அரசாங்கம் தன் மீதான விமர்சனங்களை மறைக்க அடக்குமுறையை ஏவப் பார்க்கிறது.” என்றார்.

`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்‌கூட காரணம்!’ – சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)

ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In