Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“முதிய பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டு சிறை” – கேரளம் நிறைவேற்றிய முதியோர் பாதுகாப்பு மசோதா சிறப்பு என்ன? | 3 years in prison for abandoning elderly parents; key features of Kerala Senior Citizens’ Protection Bill

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
“முதிய பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டு சிறை” – கேரளம் நிறைவேற்றிய முதியோர் பாதுகாப்பு மசோதா சிறப்பு என்ன? | 3 years in prison for abandoning elderly parents; key features of Kerala Senior Citizens’ Protection Bill
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளத்தில் முதியோர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘2026-ம் ஆண்டின் கேரள மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ​

இச்சட்டத்தின் கீழ் முதியோர்களைத் தவிர்க்கவோ அல்லது கைவிடவோ திட்டமிட்டு, அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லங்களிலோ அல்லது வேறு ஏதேனும் இடங்களிலோ விட்டுச் செல்வது கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முதியோர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் அவர்களின் சொத்துக்களைச் சட்டவிரோதமாக அபகரித்தல் போன்ற குற்றங்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், முதியவர்கள் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு அவர்களை நிர்ப்பந்திக்கும் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கும் குடும்பத்தினரின் மோசமான நடத்தைகளும் இச்சட்டத்தின் கீழ் கொடூரக் குற்றமாகக் கருதப்படும்.

​முதியோர்களுக்கு எதிரான வாய்மொழியாகப் பேசி துன்பப்படுத்துதல், கட்டாயக் கட்டுப்பாடுகள், பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, உடல்-மனம், உணர்ச்சி ரீதியான காயங்களை ஏற்படுத்துதல், கண்ணியமாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளை மறுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இச்சட்டத்தின்படி சித்திரவதை என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

அதேபோல், முதியவர்கள் கொடுமைக்கோ அல்லது சுரண்டலுக்கோ ஆளாகியிருப்பதை மருத்துவர்களோ அல்லது பராமரிப்பு மையங்களோ கண்டறிந்தால், அவர்கள் 48 மணி நேரத்திற்குள் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகுந்த காரணமின்றி இத்தகவலை மறைத்தால் அல்லது தெரிவிக்கத் தவறினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், முதியவர்களை ஏமாற்றும் இணையவழிக் குற்றங்களும் கடுமையான சைபர் மோசடியாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டம் வழிவகை செய்கிறது. ​



.

Previous Post

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம்: மகா.வில் வெட்டப்படும் 32,000 மரங்கள் | 32,000 trees to be felled in Maharashtra for a power plant project

Next Post

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: நெதன்யாகு – ஐசன்காட் இடையே இழுபறி|Netanyahu vs Eisenkot: Israel Election Ends in a Deadlock

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: நெதன்யாகு – ஐசன்காட் இடையே இழுபறி|Netanyahu vs Eisenkot: Israel Election Ends in a Deadlock

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: நெதன்யாகு - ஐசன்காட் இடையே இழுபறி|Netanyahu vs Eisenkot: Israel Election Ends in a Deadlock

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In