Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்நாடகா: `கன்னடர்களுக்கே முன்னுரிமை' தனியார் நிறுவனங்களுக்குத் முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகளை மறுத்தால், மாநில அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் மொழி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி இளம் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், “நேர்காணலின் போது தாய்மொழி ‘கன்னடம்’ என்று குறிப்பிடும் விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பதிலாகத் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் குறைந்த ஊதியத்தில் பணிவழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஐடி ஊழியர்
ஐடி ஊழியர்

மேலும் பெங்களூரு கல்லூரிகளில் Campus Interviews சரியாக நடத்தப்படுவதில்லை” எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படாவிட்டாலும், சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், “தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றே கன்னடர்களைப் புறக்கணிப்பது கண்டறியப்பட்டால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கன்னடர்களின் உரிமை, கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது. பெங்களூருவை உலகமே இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகராகப் பார்க்கிறது. அதற்கு நமது கன்னடர்களின் திறமையும் உழைப்புமே காரணம். கன்னடர்களின் நலன்களைக் காப்பதில் மாநில அரசு எப்போதும் உறுதியுடன் செயல்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் அசோக் கௌடா, “அரசு வெறும் எச்சரிக்கையோடு நிறுத்தாமல், தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் உறுதியான விதிகளை அரசு உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2024-ம் ஆண்டில், தனியார் துறையில் உள்ளூர்வாசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்குச் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பால் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் மாநிலங்களுக்கு குறைவான நிதி… ‘தனி நாடு’ சர்ச்சை – டிகே சிவக்குமார் தம்பி போட்ட புது குண்டு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

Next Post

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா’ – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்|The Latin American Political Landscape: ‘Lula Defeats Trump-style Policy’ – What Does This Victory Signify?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா’ – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்|The Latin American Political Landscape: ‘Lula Defeats Trump-style Policy’ – What Does This Victory Signify?

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' - இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்|The Latin American Political Landscape: 'Lula Defeats Trump-style Policy' – What Does This Victory Signify?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In