Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pasumai Vikatan – 10 November 2026 – தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா… நீதி தவறும் மத்திய அரசு… பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
Pasumai Vikatan – 10 November 2026 – தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா… நீதி தவறும் மத்திய அரசு… பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி பொய்த்துப்போனது. தற்போது மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் சம்பாச் சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக ஆட்சியாளர் களோ, `தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என அடாவடித்தனமாகப் பேசுகிறார்கள்,

கர்நாடகாவைச் சட்டப்படி கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றமோ, `அங்குள்ள அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு எப்படி உத்தரவிட முடியும்?’ என்கிறது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் சட்ட ரீதியான நியாயங்களைப் பட்டியலிட்டார்.

“தமிழக முதலமைச்சர், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக மாநிலத்திடம் இருந்து தண்ணீர் பெற எந்த ஓர் ஆக்கபூர்வமான முயற்சி யையும் மேற்கொள்ளவில்லை. கர்நாடக மாநிலத்தில் இயல்பான மழைப்பொழிவு இல்லாத காலங்களில் அங்குள்ள அணைகளில் எத்தனை சதவிகிதம் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கிறதோ, அதைக் கழித்துவிட்டு மீதியுள்ள தண்ணீரை எவ்வாறு தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் எனக் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பற்றாக்குறை காலப் பகிர்வின் அடிப்படையில்தான் நாம் தற்போது தண்ணீர் கோருகிறோம்.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது. கர்நாடக அரசு மறுத்துவிட்டது. ‘4,000 கன அடி நீராவது திறக்க வேண்டும்’ என மேலாண்மை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டது. அதையும் காற்றில் பறக்கவிட்டது கர்நாடகா. மூன்றாவது முறையாக வெளியிட்ட, ‘3,000 கன அடி நீராவது திறக்க வேண்டும்’ என்ற உத்தரவும் கானல்நீராகவே போனது.

‘ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்த மறுத்தால், அம்மாநில அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் தற்காலிகமாக எடுத்து, தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்’ என்கிறது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு. மத்திய அரசோ, நீதி தவறி கர்நாடகாவுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார், கி.வெங்கட்ராமன்.

நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் மத்திய பா.ஜ.க அரசு.

– ஆசிரியர்



.

Previous Post

“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சன்னரக பொன்னி அரிசி சர்ச்சை: டெண்டர் விவரங்களைக் கேட்கும் உதயநிதி|Free Ration Rice Polished and Sold for ₹30? Udhayanidhi Questions TN Govt

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சன்னரக பொன்னி அரிசி சர்ச்சை: டெண்டர் விவரங்களைக் கேட்கும் உதயநிதி|Free Ration Rice Polished and Sold for ₹30? Udhayanidhi Questions TN Govt

சன்னரக பொன்னி அரிசி சர்ச்சை: டெண்டர் விவரங்களைக் கேட்கும் உதயநிதி|Free Ration Rice Polished and Sold for ₹30? Udhayanidhi Questions TN Govt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In