Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், “இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று உள்ளவன் என்றும், தமிழ்நாட்டில் நான் தீவிரவாதி இல்லை என்றும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணியில் முகமது ஷமி ஒரு கேட்சை விட்டுவிட்டார். உடனே அன்று இரவு ட்விட்டரில் ‘கோ பேக் டு பாகிஸ்தான்’ என ட்ரெண்ட் ஆக்கி அவர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த இடத்தில் சச்சின் டெண்டுல்கரோ அல்லது விராட் கோலியோ இருந்திருந்தால் அப்படிச் சொல்வதில்லை. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?

வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 10% அளவிற்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? சுதந்திரம் கிடைத்ததில் இருந்து தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்ததே இல்லை. அதைப்போக்கியவர் முதல்வர் விஜய். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இனி ஒவ்வொரு அமைச்சரவையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

நாங்கள் புதுப்பேட்டையில் பிரசாரத்தின் போது `ஒருவேளை இவர்கள் பாஜகவின் பி-டீமாக இருப்பார்களோ?’ என மக்கள் சந்தேகப் பார்வையை வீசுவார்கள். நான் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் சுண்டிப் போகும் வரை, என் பேச்சில் கடைசி மூச்சை இழுத்து நிறுத்தும் வரை, என் தாயின் மீது ஆணையிட்டு எந்தக் கழகத்தில் சேர்ந்தேனோ, அந்தத் தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பா.ஜ.க-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – த.வெ.க

இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தமிழக வெற்றி கழகம் இடையே இருக்கும் நட்பு, ஒரே கொடியில் பூத்த இரு மலர்களைப் போன்றது. நீங்கள் வேறு, நான் வேறு இல்லை. என்னை அடித்தால் உங்களுக்கு வலிக்கும், உங்களை அடித்தால் நாங்கள் சும்மா இருக்கவே மாட்டோம். உங்களை அடிக்கவே விடமாட்டோம். த.வெ.க-வைத் தாண்டித்தான் யாராக இருந்தாலும் உங்களிடம் வர முடியும். சிறுபான்மை மக்களுக்கு இத்தனை நாட்களாக ஏன் அதிகாரம் தரவில்லை என்று யோசியுங்கள். நான் யாரையும் குறை சொல்ல ஆசைப்பட்டு இங்கு வரவில்லை. ஆனால் என் நெஞ்சம் பொறுக்கவில்லை, என் நெஞ்சம் விம்முகிறது.

அருமையான கலகக் குரலுக்குச் சொந்தக்காரரான நாகூர் ஹனிபா பாடல் ஒலிக்காத திராவிட மேடையே இல்லையே! திமுகவின் வெற்றியில் இவர்களுக்குப் பங்கில்லையா? இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வாக்குகளை வாங்காமல் திமுக வெல்லவில்லை. அப்படி ஜெயித்து முடித்துவிட்டு, எங்களைப் பிடித்த ஏழரை சனி விட்டது என்றெல்லாம் பேசினார்கள். எனவே, அவர்கள் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினாலும், அவர்களுக்கும் சேர்த்து வேலை பார்ப்போம்.

விஜய் ராஜ் மோகன்
விஜய் ராஜ் மோகன்

இதய சுத்தத்தோடு, வெள்ளை மனதோடு உங்களிடம் சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! கடைசி நாள் வரை ஒருபோதும் உங்களுக்கு நாங்கள் துரோகத்தை இதயத்தால் கூட நினைக்க மாட்டோம். நீங்கள் என் தாயின் வயிற்றில் பிறக்காத என்னுடைய சகோதரர்கள். உங்களுக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உங்களுக்காக ஓடிவந்து நிற்போம்.” என்றார்.

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“திமுக எங்க கூட்டணிக்கு வர வேண்டும்; மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?” – திருநாவுக்கரசர் பேட்டி / DMK Should Join Our Alliance: Is Vijay Getting Close to Modi? Thirunavukkarasar Interview

Next Post

பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி… சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி… சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி... சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In