Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவிலும் போராட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த சதி – மோகன் பகவத் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவிலும் போராட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த சதி – மோகன் பகவத் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 1:59 PM IST

வங்கதேசம் மற்றும் நேபாளத்தை போல இந்தியாவிலும் போராட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

வங்கதேசம், நேபாளத்தை போல இந்தியாவிலும் போராட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சதி நடப்பதாகவும், அது ஒருபோதும் நடக்காது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் விஜயதசமி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய மோகன் பகவத், மேற்கு நாடுகளில் இருந்து ஒரு சதிப் புயல் வீசி வருவதாகவும், அது மனித மாண்புகளுக்கு எதிரானது என்றும் கூறினார். பிரான்ஸ், அல்பேனியா, வங்கதேசம், நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலும் அதுபோன்று முயற்சிகள் நடப்பதாகக் கூறினர்.

ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக வலுவான தலைமையின் கீழ் இந்தியா செயல்பட்டு வந்ததாலும், நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற இளம் தலைமையினரின் உத்வேகத்தாலும், அசுர சக்திகளின் ஆட்டம் முடக்கப்பட்டதாக மோகன் பகவத் தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சூழ்நிலையும் மாறிவிடாது என்றும் அவர் கூறினார்.

மேலும் நமது உணர்ச்சிகளின் தீவிரம் எப்படி இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின்படி நமது செயல்களுக்கு வரம்புகள் உள்ளன. நமது பேச்சிலும் நடத்தையிலும் நாகரிகமான பொது நடத்தை நெறிகளால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளும் உள்ளன. நமது செயல்கள் இந்த வரம்புகளுக்குள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பிரச்சினைகள் இருக்கும். இந்தப் பிரச்சினைகளால் போராட்டங்கள் ஏற்படும். ஒரு ஜனநாயகத்தில் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், போராட்டங்கள் எதற்காக இருக்க வேண்டும்? அவை தீர்வுகளுக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவத்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரை ஊக்கமளித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.



.

Previous Post

விலங்குகள் பரிசோதனை விதிகள்: மறுஆய்வு கோரும் தயாநிதி மாறன்|Animal Testing Rules Under Fire: Dayanidhi Maran Writes to Centre

Next Post

கன்னியாகுமரி மாணவி பாலியல் தொல்லை புகார்: இபிஎஸ் கண்டனம்|Kanyakumari Case: EPS Questions Women’s Safety Under TVK

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கன்னியாகுமரி மாணவி பாலியல் தொல்லை புகார்: இபிஎஸ் கண்டனம்|Kanyakumari Case: EPS Questions Women’s Safety Under TVK

கன்னியாகுமரி மாணவி பாலியல் தொல்லை புகார்: இபிஎஸ் கண்டனம்|Kanyakumari Case: EPS Questions Women's Safety Under TVK

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In