Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கார்த்திகா கைது விவகாரம்: ‘திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை.!’– வன்னியரசு காட்டம்| minister vanni arasu slams dmk and ntk regarding karthika arrest

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
கார்த்திகா கைது விவகாரம்: ‘திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை.!’– வன்னியரசு காட்டம்| minister vanni arasu slams dmk and ntk regarding karthika arrest
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்கு கண்டனங்கள் எழுந்தன.

கார்த்திகா

கார்த்திகா

குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?

கடந்த காலங்களில் கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது என்றும் நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.



.

Previous Post

இந்தியாவின் எரிசக்தி பன்முகத்தன்மைக்கு அமெரிக்கா வரவேற்பு.. வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“எங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் நீங்கள்” – பிரதமர் மோடியை குறிப்பிட்டு போலந்து பிரதமர் உரை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் நீங்கள்” – பிரதமர் மோடியை குறிப்பிட்டு போலந்து பிரதமர் உரை! | India News (இந்தியா செய்திகள்)

“எங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் நீங்கள்” - பிரதமர் மோடியை குறிப்பிட்டு போலந்து பிரதமர் உரை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In