Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விடுமுறை நாளிலும் அரசு விழாக்கள்’- புலம்பும் புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்; அமைச்சர் பர்வேஸ் விளக்கம் | Pudukkottai Govt Employees Upset Over Holiday Events; Minister Parvez Responds

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
`விடுமுறை நாளிலும் அரசு விழாக்கள்’- புலம்பும் புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்; அமைச்சர் பர்வேஸ் விளக்கம் | Pudukkottai Govt Employees Upset Over Holiday Events; Minister Parvez Responds
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“பண்டிகை காலங்கள்ல தொடர்ந்து 3, 4 நாள் விடுமுறை கிடைச்சா, எங்க சொந்த ஊருக்குப் போய் பொண்டாட்டி, பிள்ளைகளோட நிம்மதியா இருக்கணும்னுதானே நினைப்போம்? ஆனா, அமைச்சரின் நிகழ்ச்சிகளால அந்த சந்தோஷமே காணாமல் போயிடுச்சு..!” இப்படி கவலையோடும் கொந்தளிப்போடும் புலம்புகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர்கள்.

ஆயுத பூஜை விடுமுறை நாள்களில்கூட ஓய்வின்றி மாவட்ட அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் தற்போது அனலைக் கிளப்பியுள்ளன.

குடும்பத்தினருடன் கழிக்க வேண்டிய விடுமுறை.. விழாக்களில் கழிந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் அரசுப் பணியில் உள்ளவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாள்களில் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் போது, வெளியூர்களில் வேலை செய்யும் அரசு அலுவலர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்குப் போய் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகளைச் சந்திக்கத் திட்டமிடுவது வழக்கம். பஸ் கிடைக்கவில்லை என்றாலும் நின்று கொண்டாவது ஊருக்குப் போய்விடலாம் என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆயுத பூஜை விடுமுறை நாள்களில் அந்த மகிழ்ச்சி முற்றிலுமாகப் பறிபோய்விட்டதாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரே நாளில் 17 நிகழ்சிகள்:

சமீபத்திய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர்கள், “கடந்த அக். 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சமுதாய வளைகாப்பு, புதிய கட்டடங்கள் திறப்பு, பேருந்து சேவை தொடக்கம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு என ஒரே நாளில் மொத்தம் 17 அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்; அடுத்த நாள் அக்.19 ஆம் தேதி ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார். மாவட்ட, தாலுகா அளவில் உள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால், விடுமுறை நாளிலும் கூட யாரும் ஊருக்குப் போக முடியாமல் அமைச்சரின் நிகழ்ச்சிகளில் நொந்துகொண்டே பங்கேற்றனர்.

மேலும் ஆலங்குடி பகுதியில் வளைகாப்பு நிகழ்ச்சி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி விழா, ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் என இந்த ஓட்டம் நின்றபாடில்லை” என்கிறார்கள் ஆதங்கத்துடன்.

மேலும் நம்மிடம் தொடர்ந்து பேசியவர்கள்,

” எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசு வாகன வசதி கிடையாது. விழா நடக்கும் இடத்திற்கு நேரத்திற்குப் பேருந்து வசதியும் இருக்காது. இதனால் சொந்தச் செலவிலேயே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அரசு ஊழியர்கள் அலைய வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியிலும் இதே நிலைதான் இருந்தது; ஆனால் “மாற்றம்’ கொண்டுவருவதாகப் பொறுப்பேற்ற இந்த ஆட்சியிலும் அதே அவல நிலை தொடர்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என வேதனைப்படுகிறார்கள், வெளிமாவட்டங்களிருந்து இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள்.

மருத்துவமனைக்குச் செல்வது மற்றும் சொந்த வேலைகளைப் பார்ப்பது போன்ற எதையும் செய்ய முடியாமல் தங்கள் பண்டிகை கால விடுமுறையையும் மகிழ்ச்சியையும் அமைச்சர் வீணாக்கிவிட்டதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.



.

Previous Post

ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணமாக ரூ.35.71 கோடி.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு! | இந்தியா போட்டோகேலரி

Next Post

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In