Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" – விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகையில் போதை பொருள் விவகாரத்தில் த.வெ.க நிர்வாகி கைதானதற்கு தான் ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதை மறந்து மு.க.ஸ்டாலின் லியோதாஸ், பிரேக்கிங் பார்ட்டி என அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியுள்ளார். போதைப்பொருள் விவகாரம் என்றாலே தி.மு.க-வினர் சிக்கி விடுவார்களோ என்ற பதற்றம் உங்களுக்கு ஏற்படுவதை தெரியாமல் காட்டிக்கொள்வதற்காக இப்படியான கருத்துகளை நீங்கள் பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை. இதில் மறைப்பதற்கு ஏதும் இல்லை. போதைப் பொருள் புழக்கம், கடத்தல் தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்த ஆட்சி எந்த ஆட்சி என மக்கள் நன்கறிவார்கள்.

போதை பொருளால் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்ற அளவில் செய்தி சேனல்களும் , செய்தித்தாள்களும் நிரம்பியிருந்த ஆட்சிக்காலம் உங்கள் தலைமையிலான தி.மு.க-வின் ஆட்சிக் காலம். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் சர்வதேச கடத்தல் கும்பலுடன் டீலிங் வைத்து தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்து வந்த உங்கள் கட்சி நிர்வாகியின் கதையை ஊரறியும். அப்போது நீங்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் நீங்கள் தான் போலீஸ் இலாகா மந்திரி என்பதும் தமிழக மக்கள் அறிந்த ஒன்றுதான். கைது செய்யப்பட்ட த.வெ.க நிர்வாகியை கட்சி உடனடியாக நீக்கியுள்ளது. அதோடு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் வழக்கில் இப்படித்தான் நடந்ததா என்பதை ஒப்பிட்டு பார்க்க மக்களுக்கு தெரியும். 

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட கேன்சர் நோய் போல பரவிய போதை புழக்கத்தை விட்டுட்டு வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது கொஞ்சமும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் போதைக்கெதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து வரும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தலைவர் முதலமைச்சர் விஜய் குறித்து அவசர அவசரமாக அறிக்கை விடும் நீங்கள், இந்த வேகத்தை 

தி.மு.க ஆட்சியில் சினிமாத்துறை தொடங்கி கல்லூரி வாசல் வரை போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடியபோது காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது தானே விசாரணை தொடங்கியுள்ளது. அவசரப்படாதீர்கள் இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்போது, அது உங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக கூட இருக்கலாம். அதுமட்டுமல்ல போதை பொருள் விவகாரத்தில் ஒழிப்பு செய்ய முயற்சிப்பது யார்? ஒளிப்பு செய்ய முயற்சித்தது யார்? என்பதெல்லாம் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளின்
மாத்திரை கவர்களில் இந்தி… சர்ச்சையும் பின்னணியும் என்ன?



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு... மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In