Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மேகவெடிப்பு அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" – அன்புமணி சொல்வது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்…”-  அன்புமணி காட்டம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது.

சென்னை மழை

சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும், மீனம்பாக்கம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருப்பது எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை.

காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றை ய மழைப்பொழிவு அமைந்துள்ளது. நடப்பாண்டில் எல் -நினோ தாக்கமும் இருப்பதால் நிலைமை மோசமடையும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

Rain Alert - மழை
Rain Alert – மழை

சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் நேற்று பெய்ததை விட இன்னும் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்ப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதை மனதில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 43 மாதங்களாகியும் அந்த அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை.

அன்புமணி
அன்புமணி

திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த 161 பரிந்துரைகள் என்னென்ன? செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகள் என்னவென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது.

இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும்.”

‘நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது’- அன்புமணி விமர்சனம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு.. தஜிகிஸ்தான் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In