Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” – TRB ராஜா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2026
in அரசியல் செய்திகள்
0
“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” – TRB ராஜா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டு, இன்று (அக்டோபர் 16) தவெக ஆட்சியில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை திமுகதான் தொடங்கி வைத்தது என்று திமுக சொந்தம் கொண்டாடுகிறது.

ஆனால், தவெகவோ, “இது ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது” என்று திமுக சொல்லும் ‘ஸ்டிக்கர்’ குற்றச்சாட்டை மறுக்கிறது.

தவெகவின் மறுப்பு குறித்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “ரிப்பன் கட்டிங் எளிது… Institution-building?!…

அதற்கு வேற லெவல் லீடர்ஷிப் வேண்டும்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்
இந்தியாவிலேயே பணவீக்கத்தில் ‘தமிழ்நாடு’ முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?

அண்ணாந்து வேடிக்கை மட்டுமே…

கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்க ரிப்பன் வெட்டுவது எளிது.

ஆனால் ஒரு தலைமுறையின் அறிவை வடிவமைக்கும் நிறுவனத்தைக் கற்பனை செய்து, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, கட்டியெழுப்புவதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடையாளம்.

அதனால்தான் திராவிட நாயகன் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி எட்டிய உயரங்களை, இன்றைய ஸ்டிக்கர் மாடல் அரசால் அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

ஹப் அண்ட் ஸ்போக் மாடல்

சென்னையில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அறிவுப் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து, தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரை, திருச்சி, கோவை எனத் தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கான கட்டமைப்பைப் பரவலாக்கினார்.

தலைவர் கலைஞர் சிறிய நூலகங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கினார். தலைவர் ஸ்டாலின் நூலகங்களை ஒரு ஹப் அண்ட் ஸ்போக் மாடல் முறையில் அனைவருக்கும் அனைத்துத் தரங்களிலும் நூலகச் சேவை கிடைக்கும்படி செய்தார்.

கோவை பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட திட்டம். இன்று அதை வேறு அரசு திறந்து வைக்கலாம்.

Ribbon-cutting எளிது.
Institution-building?!… அதற்கு வேற லெவல் Leadership வேண்டும்.

#CMMKStalin level LEADERSHIP. ♥️

கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை திறந்துவைக்க ரிப்பன் வெட்டுவது எளிது.
ஆனால் ஒரு தலைமுறையின் அறிவை வடிவமைக்கும் நிறுவனத்தை கற்பனை செய்து, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, கட்டியெழுப்புவதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடையாளம்.

அதனால்தான் #திராவிடநாயகன் @mkstalin அவர்களின் ஆட்சி எட்டிய உயரங்களை, இன்றைய sticker-model அரசால் அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

சென்னையில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அறிவுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தலைவர் #CMMKStalin அவர்கள் மதுரை, திருச்சி, கோவை என தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கான கட்டமைப்பைப் பரவலாக்கினார்.

தலைவர் கலைஞர் சிறிய நூலகங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கினார். தலைவர் ஸ்டாலின் நூலகங்களை ஒரு hub and spoke model முறையில் அனைவருக்கும் அனைத்து தரங்களிலும் நூலக சேவை கிடைக்கும்படி செய்தார். ♥️

கோவை பெரியார் அறிவுலகம் #திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட திட்டம்.

இன்று அதை வேறு அரசு திறந்து வைக்கலாம்.
ஆனால் இதே அளவிலான ஒரே ஒரு அறிவுசார் நிறுவனத்தையாவது இவர்கள் உருவாக்குவார்களா?

The #TVK government must understand this:

There is dignity in acknowledging the work of those who came before and worked hard.

Leadership is strengthened, not diminished, by giving credit where it is due.

#PeriyarLibrary #DMK

— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 16, 2026

அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருவதால்…

ஆனால் இதே அளவிலான ஒரே ஒரு அறிவுசார் நிறுவனத்தையாவது இவர்கள் உருவாக்குவார்களா?

தவெக அரசு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு முன்னால் வந்து கடுமையாக உழைத்தவர்களின் பணியை அங்கீகரிப்பதில் ஒரு கண்ணியம் இருக்கிறது.

தகுதியானவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருவதால் தலைமைத்துவத்தின் பலம் கூடுமே தவிர, ஒருபோதும் குறையாது” என்று பதிவிட்டுள்ளார்.

Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?



.

Previous Post

News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? – வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

Next Post

பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In