Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஜந்தர் மந்தரில் போராடத் தடை! பாஜக அரசின் அச்சத்தின் வெளிப்பாடு” – சு.வெங்கடேசன் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2026
in அரசியல் செய்திகள்
0
“ஜந்தர் மந்தரில் போராடத் தடை! பாஜக அரசின் அச்சத்தின் வெளிப்பாடு” – சு.வெங்கடேசன் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 12, 2026 4:27 PM IST

டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதிக்கப்பட்டதற்கு சிபிஎம் எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18
News18

டெல்லியின் ஜந்தர் மந்தர் இனி போராட்டக் களம் கிடையாது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சியினர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வரும் நிலையில், தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் அதற்கான அனுமதியை மறுத்துவருகின்றனர்.

இந்தச் சூழலில், ஜந்தர் மந்தரை போராட்டக் களத்தில் இருந்து நீக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், புதிதாய் மூன்று இடங்களை போராடுவதற்கு தேர்வு செய்தும் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் இதற்கு சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களை நடத்த முடியாது என டெல்லி காவல்துறை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல்  அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.

ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களை நடத்த முடியாது என டெல்லி காவல்துறை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.


அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மக்களின் போராடும் உரிமை நசுக்கப்படுவதைக தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்திருக்கும் அனைத்து உரிமைகளையும் மோடி அரசு மறுத்து வன்முறையைக் கட்டவிழ்த்தது. கிட்டத்தட்ட டெல்லி ஒரு Police State ஆகத்தான் இருந்தது.

ஜந்தர் மந்தரில் எழுப்பபடும் குரல்களுக்கே மதிப்பில்லை என்றால் அந்த இடத்தை வேறு எங்கு மாற்றினாலும் அதேநிலைதான் தொடரப்போகிறது என்பது தெளிவாகியுள்ளது

போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது.

மோடி – அமித் ஷா அரசு பொதுமக்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நாள், அத்தனை வன்முறைகளுக்கும் பொறுப்பேற்கும் நாள் விரைவில் வரும்!

#JantarMantar #ArrestCEC

— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 12, 2026

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மக்களின் போராடும் உரிமை நசுக்கப்படுவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்திருக்கும் அனைத்து உரிமைகளையும் மோடி அரசு மறுத்து வன்முறையைக் கட்டவிழ்த்தது. கிட்டத்தட்ட டெல்லி ஒரு Police State ஆகத்தான் இருந்தது.

ஜந்தர் மந்தரில் எழுப்பப்படும் குரல்களுக்கே மதிப்பில்லை என்றால் அந்த இடத்தை வேறு எங்கு மாற்றினாலும் அதேநிலைதான் தொடரப்போகிறது என்பது தெளிவாகியுள்ளது. போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது.

மோடி – அமித் ஷா அரசு பொதுமக்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நாள், அத்தனை வன்முறைகளுக்கும் பொறுப்பேற்கும் நாள் விரைவில் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

Next Post

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாட்டியா? போராட்டமா? – அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமானதாக டெல்லி காவல்துறை தகவல்| Delhi Police Informs Abhijeet Dipke That His Grandmother Has Passed Away

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In