Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' – அமைச்சர் அருண்ராஜ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' – அமைச்சர் அருண்ராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளிலேயே மருந்து உறைகளில் இந்தி இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பி இருக்கிறது.

இது தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தனது அதிகாரபூா்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழக மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல என்றும், முதலில் கரூா், இப்போது கோவையிலும் அதே நிலைமை நிலவுகிறது’ என்றும் பதிவிட்டிருந்தார்.

டி.ஆர்.பி ராஜா
டி.ஆர்.பி ராஜா

சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,

” மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்!

எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்!

உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

‘இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!’- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல்

உண்மை நிலை என்ன?

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் ‘காலை / மதியம் / இரவு’ போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு (Seal) வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன!

திமுக - அதிமுக
திமுக – அதிமுக

அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே — அதாவது திமுக ஆட்சியில்தான் — அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?

தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்!

தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது!

உடனடி நடவடிக்கை:

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு ‘தமிழ் மொழியில் மட்டுமே’ விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ‘தமிழ் மற்றும் ஆங்கிலம்’ ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.

பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ரிலீஸ்: அக்டோபர் 11-20 வரை முக்கிய தரிசன மாற்றங்கள்! | Tirupati TTD Rs 300 Special Darshan Tickets Release Today: Important Updates For October 2026

Next Post

குற்றாலம் மெயின் அருவிக்கு செல்ல திட்டமா? இன்று முதல் குளிக்க தடை! மாற்று இடங்கள் இதோ | Courtallam Main Falls Closed: Best Alternatives Near Tenkasi To Visit In 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குற்றாலம் மெயின் அருவிக்கு செல்ல திட்டமா? இன்று முதல் குளிக்க தடை! மாற்று இடங்கள் இதோ | Courtallam Main Falls Closed: Best Alternatives Near Tenkasi To Visit In 2026

குற்றாலம் மெயின் அருவிக்கு செல்ல திட்டமா? இன்று முதல் குளிக்க தடை! மாற்று இடங்கள் இதோ | Courtallam Main Falls Closed: Best Alternatives Near Tenkasi To Visit In 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In