Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"ஆபாசம், வன்மம், வக்கிரம்…" – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2026
in அரசியல் செய்திகள்
0
"ஆபாசம், வன்மம், வக்கிரம்…" – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார்.

அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Sathyabama Vijay
Sathyabama – Vijay

முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவக்கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

நெருக்கடியில் விஜய்… உஷ்ணத்தில் எடப்பாடி… பதற்றத்தில் ஸ்டாலின்… இடைத்தேர்தல் க்ளைமாக்ஸ்!



.

Previous Post

INDIA BLOC: கார்கே திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் – இந்தியா கூட்டணிக்குள் தவெக நுழைந்த பின்னணி!

Next Post

சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவை பாதிப்பு! பயணிகள் கவனத்திற்கு – தாமதத்தைத் தவிர்க்க இதோ முக்கிய டிப்ஸ்! | Chennai Airport Flight Delays Today: Runway Maintenance Schedule And Travel Tips For October 3, 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவை பாதிப்பு! பயணிகள் கவனத்திற்கு – தாமதத்தைத் தவிர்க்க இதோ முக்கிய டிப்ஸ்! | Chennai Airport Flight Delays Today: Runway Maintenance Schedule And Travel Tips For October 3, 2026

சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவை பாதிப்பு! பயணிகள் கவனத்திற்கு - தாமதத்தைத் தவிர்க்க இதோ முக்கிய டிப்ஸ்! | Chennai Airport Flight Delays Today: Runway Maintenance Schedule And Travel Tips For October 3, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In