Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆந்திராவில் ரிலையன்ஸ் மெகா முதலீடு.. விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
ஆந்திராவில் ரிலையன்ஸ் மெகா முதலீடு.. விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 02, 2026 4:12 PM IST

என்னை ஆந்திராவின் மகனாகக் கருதுங்கள். ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு வழிகாட்ட வேண்டும்

News18
News18

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ராயலசீமாவைச் செழிப்பான மண்டலமாக மாற்றும் வகையில், அன்னமய்யா மாவட்டம் மதனாபல்லியில் ‘உலகளாவிய தோட்டக்கலை மையம்’ மற்றும் ‘இந்திய வேளாண்மைப் பள்ளி’ அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் நர சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, “என்னை ஆந்திராவின் மகனாகக் கருதுங்கள். ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு வழிகாட்ட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அவரது உரையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரைப் பாராட்டினார். அனந்த் அம்பானியின் வாக்குறுதியைத் தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரை அன்புடன் ஆரத்தழுவி வாழ்த்தினார்.

இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் பாணியில் உருவாக்கப்படும் இந்த இந்தியன் ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சர், விவசாயிகளைத் தங்களது நிலங்களின் ‘சி.இ.ஓ’ ஆக மாற்றும் என்று அனந்த் அம்பானி குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பூச்சிக் தாக்குதல்களைத் தடுப்பது, துல்லியமான விவசாயம் மூலம் நீர் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் இங்குச் செய்து தரப்படும்.

ரிலையன்ஸ் நிறுவனம் பசுமை ஆற்றல் திட்டங்களின் கீழ் சிபிஜி ஆலைகளை அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் எரிசக்தி உற்பத்தியாளர்களாக மாறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ‘வந்தாரா’  திட்டம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் ஹைடெக் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தப் போவதாகக் கூறினார்.

ஆந்திராவில் தொழில்களை எளிதாகத் தொடங்கும் சூழல் உள்ளதால், ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் 388 மெகா முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதன் மூலம் 11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அனந்த் அம்பானி சுட்டிக்காட்டினார். ராயலசீமா தோட்டக்கலை மையத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் முழு ஆதரவை அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.



.

Previous Post

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஐஆர்சிடிசி அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – சீட் நிலவரம் மற்றும் புக்கிங் டிப்ஸ்! | IRCTC Tour Packages 2026: Araku Vistadome & Srisailam Booking Tips And Seat Availability Guide

Next Post

இடைத்தேர்தல் களம்: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்! – Photo Album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இடைத்தேர்தல் களம்: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்! – Photo Album

இடைத்தேர்தல் களம்: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்! - Photo Album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In