Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' – நயினார் நாகேந்திரன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' – நயினார் நாகேந்திரன்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. நேற்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி, பா.ஜ.க-வின் ஒரு பிரிவுதான் தவெக எனப் பேசினார். அது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், இன்று கோவையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “முதலமைச்சர் விஜய் தடுமாற்றத்தில் எதையோ பேசப் போய் எதையோ பேசி முடித்துள்ளார். எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் அவர் தடுமாறியதே, இந்தத் தேர்தலில் அவருக்குப் ஏற்படப்போகும் பெரிய மாற்றமாக அமையப் போகிறது. தான் செய்த சாதனைகள் என்று அவர் பெரிய பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

விஜய்
விஜய்

ஆனால், தவெக அரசின் சாதனைகளை நான் சொல்லட்டுமா? ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதி தொடர்பான எந்தக் கோப்பில் அவர் கையெழுத்திட்டார்? நாளொன்றுக்கு 5 மணி நேர மின்வெட்டு, ஆவின் பால் கொள்முதலைக் குறைத்துவிட்டு விலை உயர்த்தியது, யாருக்கும் தெரியாமல் பேருந்துக் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியது ஆகியவைதான் இந்த அரசின் சாதனைகளாக உள்ளன.

இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு மாதங்களில் குழந்தைகளுக்குக் கூடப் பால் கிடைக்காத சூழல் உருவாகும். ஆபத்தான சூழலில் 170 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்-க்கு பாராட்டுகள். 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் செங்கோல் பற்றிய வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்துப் பேசி வந்த திமுக, தற்போது வழிபாட்டு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ‘ஓம் காளி ஜெயகாளி’ போன்ற முழக்கங்களை எழுப்புகிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இன்று ஆட்சியைத் தக்கவைக்க மாறியிருக்கிறார்கள். எதிர்காலச் சந்ததியின் நலன் கருதி, யார் தீய சக்தி, யார் நல்ல சக்தி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். அதேவேளையில், தவெக கூட்டணிக்கு ஆதரவாக உள்ள சிபிஎம் சண்முகமே இத்தேர்தலில் பண பலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை.” என்றார்.

“சனி, ஞாயிறு விடு​முறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!”- திமுக எம்.பி கனிமொழி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினருடன் போனில் பேசிய பிரதமர் மோடி.. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா? | Madurai Vandiyur Teppakulam Dries Up After Five Years

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா? | Madurai Vandiyur Teppakulam Dries Up After Five Years

வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா? | Madurai Vandiyur Teppakulam Dries Up After Five Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In