Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்…' – கண்ணீருடன் கவினின் தாய்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2026
in அரசியல் செய்திகள்
0
'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்…' – கண்ணீருடன் கவினின் தாய்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கவினின் ஆணவப்படுகொலை வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களின் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்
காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் கவினின் பெற்றோர் அவர்களின் வீட்டுக்கு வெளியே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவினின் அம்மா ஆசிரியை தமிழ்ச்செல்வியை தொடர்புகொண்டு இது சம்பந்தமாகப் பேசினோம், ”கவினை கொலை பண்ணதுல சுர்ஜித்தோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தொடர்பு இருக்குற ஆதாரமே இல்லைன்னு சொல்லி, அவங்க பெயர்களை குற்றப்பத்திரிகையில இருந்து நீக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. இந்த உத்தரவை எப்படிங்க ஏத்துக்க முடியும்? சுர்ஜித்துங்குற 22 வயசு பையன் எந்த தூண்டுதலும் இல்லாம அவனா வந்து என் பையனை வெட்டி போட்டானா? சம்பவம் நடந்தப்போ சுர்ஜித்தோட அப்பா இராஜபாளையத்துல இருந்ததா சொல்றாரு. ஆனா, அவரு கவின் செத்துக் கிடந்த இடத்துல அதை பார்க்க நிக்குறவங்களோட நிக்குற வீடியோ இருக்கு.

கவினின் பெற்றோர்
கவினின் பெற்றோர்

இராஜபாளையத்துல இருந்து அவ்வளவு சீக்கிரமா இங்க வர முடியுமா? இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பு இல்லைன்னு தீர்ப்பு கொடுக்குறாங்க. நாளைக்கு சுர்ஜித்தே கொலை பண்ணல. நடந்தது ஆணவக்கொலையே இல்லைன்னு சொல்லுவாங்க. புள்ளையை பறிகொடுத்துட்டு நாங்க இங்க ஒவ்வொரு நிமிசத்தையும் நரகத்துல வாழுற மாதிரி நகர்த்திக்கிட்டு இருக்கோம். நான் ஒரு டீச்சரு. நாலு புள்ளைங்களுக்கு பாடம் நடத்துற நான் சாதி, மதம்னு புள்ளைங்களுக்கு சொல்லி வளர்த்தது இல்ல. கவினை பத்தி ஊருக்குள்ள கூட கேட்டுப் பாருங்க. அவன் சூது வாது தெரியாத நல்ல பையன். அந்த அப்புராணி பயலை ஏமாத்தி கூட்டிட்டு போயி இவனுக கொலை பண்ணிருக்காணுக. என் புள்ளையைத்தான் இழந்துட்டேன். எனக்கு ஒரு நீதியைவாச்சு வாங்கி கொடுங்க. இந்த கொலையில சம்பந்தப்பட்ட யாரையும் விடாதீங்க. தமிழக அரசு இந்த வழக்குல மேல் முறையீடு செய்யணும். மறுவிசாரணை கண்டிப்பா நடத்தணும். விசாரணை முறையா நடத்தப்படாம சுர்ஜித் பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட காரணமா இருந்தவங்களை கண்டுபிடிக்கணும். இந்த சமூகத்துக்கு ஒரு கவின் போதும். உறுதியா நடவடிக்கை எடுத்து மத்த புள்ளைங்களை காப்பாத்துங்க” என கண்ணீர் மல்க பேசினார்.

கவின் பெற்றோரின் கோரிக்கையை தமிழக அரசு கவனிக்குமா?



.

Previous Post

காங்கிரஸுடன் இணையும் மம்தா திரிணாமுல் காங்கிரஸ்? – ரஞ்சன் சௌத்ரி சொல்வது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை..? முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை..? முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை..? முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In