Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ | Sexual assault case: Obscene videos found on the mobile phone of former PM Deve Gowda’s grandson serving a prison sentence

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ | Sexual assault case: Obscene videos found on the mobile phone of former PM Deve Gowda’s grandson serving a prison sentence
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

குற்றப்பிரிவு அதிகாரிகள் சிறையில் திடீரென ரெய்டு நடத்தினர். இதில் பிரஜ்வல் ரேவண்ணா மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிரஜ்வல் அடைக்கப்பட்டு இருந்த உயர் பாதுகாப்பு அறையில் இருந்து சார்ஜர், பென் டிரைவ் மற்றும் நோட்புக் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். போன் மற்றும் பென் டிரைவ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மொபைல் போனில் 10க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பென் டிரைவில் வெப் சீரியஸ் இருந்தது. சிறையில் ரேவண்ணாவிற்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு ரேவண்ணா அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் ஒரு சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் ரேவண்ணா ரூ.70 ஆயிரம் செலவு செய்து மொபைல் போனை சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். இது தவிர ரூ.30 ஆயிரம் கொடுத்து சிம்கார்டு வாங்கி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் தனிப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளன. லேண்ட்லைன்கள், பொது அழைப்பு அலுவலகங்கள் (பிசிஓக்கள்) அல்லது நியமிக்கப்பட்ட வீடியோ அழைப்பு மூலமாக மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் வன்கொடுமை வீடியோக்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் ரேவண்ணா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஹசன் மாவட்டம் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்த பெண், 2021 ஆம் ஆண்டு முதல் பிரஜ்வல் ரேவண்ணாவால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.



.

Previous Post

வாரணாசி கங்கை வெள்ளம்: படகு சவாரிக்கு தடை, காசி விஸ்வநாதர் தரிசனம் செய்ய புதிய வழிமுறைகள்! | Varanasi Ganga Flood Update 2026: Boat Ride Ban, Kashi Vishwanath Temple Access & Safety Tips

Next Post

வார இறுதி விடுமுறை: ஐஆர்சிடிசியின் அரக்கு மற்றும் ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – பட்ஜெட் விலையில் அசத்தலான பயணம்! | IRCTC Tour Packages 2026: Araku Valley And Srisailam Weekend Trip Details, Booking & Costs

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வார இறுதி விடுமுறை: ஐஆர்சிடிசியின் அரக்கு மற்றும் ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – பட்ஜெட் விலையில் அசத்தலான பயணம்! | IRCTC Tour Packages 2026: Araku Valley And Srisailam Weekend Trip Details, Booking & Costs

வார இறுதி விடுமுறை: ஐஆர்சிடிசியின் அரக்கு மற்றும் ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் - பட்ஜெட் விலையில் அசத்தலான பயணம்! | IRCTC Tour Packages 2026: Araku Valley And Srisailam Weekend Trip Details, Booking & Costs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In