Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடும் பனிப்பொழிவு, உறைபனி.. கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. நெகிழ்ச்சி வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 11, 2026
in அரசியல் செய்திகள்
0
கடும் பனிப்பொழிவு, உறைபனி.. கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. நெகிழ்ச்சி வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Feb 11, 2026 6:23 PM IST

குப்வாரா ஜப்தி கிராமத்தில் கடும் பனிப்பொழிவில் இந்திய ராணுவம் 26 வயது கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றியது.

Rapid Read

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனிக்கு மத்தியில், இந்திய ராணுவத்தினர் ஒரு கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஜப்தி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத இக்கட்டான சூழல் நிலவியது.

பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் இதுகுறித்து அறிந்து, உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விரைந்தனர். எந்திரங்கள் செல்ல முடியாத அளவிற்குப் பனி குவிந்திருந்ததால், ராணுவ வீரர்கள் அந்தப் பெண்ணைத் தங்களது தோளில் சுமந்தபடி கரடுமுரடான பனிப்பாதைகளில் நடக்கத் தொடங்கினர்.

உறைபனியையும் பொருட்படுத்தாமல், பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ வசதி கொண்ட இடத்திற்கு அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தனர். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.

Location :

Jammu,Jammu,Jammu and Kashmir

தமிழ் செய்திகள்/இந்தியா/

கடும் பனிப்பொழிவு, உறைபனி.. கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. நெகிழ்ச்சி வீடியோ!



.

Previous Post

வெளியாவதற்கு முன் வைரலான நாரவனே புத்தகம்: எஃப்.ஐ.ஆர் பதிவு|Banned Book Goes Viral: Naravane, China Clash and FIR

Next Post

'டார்கெட் சவுத்' – ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! – தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'டார்கெட் சவுத்' – ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! – தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In