
தமிழ் கலாசாரத்தின் பெருமைகளைச் சுமந்து செல்லும் இந்த வாகன யாத்திரை தஞ்சாவூர், புதுச்சேரி, திருப்பதி, நந்தியால், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் வழியாக வாரணாசியை அடையும் என்று கூறப்படுகிறது. இந்த வாகன யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு வரவேற்பும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், “நமது நாட்டின் பிரதமர் உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் தமிழ் மொழி பற்றியும், அதன் கலாசாரத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆர் குறித்து:
குறிப்பாக, இறந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க போராடுகிறது. எஸ்.ஐ.ஆர்-இல் எந்த விதமான குளறுபடியும் இல்லை, குளறுபடியே தமிழக முதல்வர் மட்டும்தான்.
