எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய ‘திமுக பாக முகவர்கள் 2’ ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர்.
இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் ‘பாக முகவர்கள் 2’ ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார்.
ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது.
திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்” எனப் பேசினார்
