தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR).
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரின் 7.90 கோடி வாக்காளர்களிடம் இந்த SIR செயல்படுத்தப்பட்டது. அதன் இறுதியாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேநேரம், “தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக இந்த SIR நடவடிக்கையை மேற்கொள்கிறது, அவசர அவசரமாக இதைச் செயல்படுத்த வேண்டிய தேவை என்ன? சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் மாநிலங்களைக் குறிவைத்து இந்த SIR செயல்படுத்தப்படுகிறது’ என எத்தனைக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து SIR திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இரண்டாம் கட்டமாக SIR திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தி வருகிறது. தி.மு.க, த.வெ.க, நாம் தமிழர் கட்சி என மாநிலக் கட்சிகள் தொடர்ந்து இந்த SIR-க்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தன.
