கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள அருகேரி வடகரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட நந்திமங்கலம் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் தரவேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மதுபிரியார் ஒருவர். இதனால் மது குடிப்போருக்கும் விற்பனையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள் இதனால் தினமும் மது குடிப்போர் புலம்பி வருகின்றனர். இந்த ஐந்து ரூபாய் பணத்தை தற்போது உள்ள அமைச்சர் தான் வாங்க சொன்னார் என கூறுகிறார் கடை விற்பனையாளர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. அல்ல அமைச்சர் சொன்னது உண்மையா?. ஐந்து ரூபாய் லஞ்ச பணம் எங்கே செல்கிறது.. மது குடிப்போர்களுக்கு விடை கிடைக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

