இதில் தெலங்கானா அரசு, “2034 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர்களாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 3 டிரில்லியன் டாலர்களாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக” உறுதி எடுத்திருக்கிறது.
டிசம்பர் 8-9 தேதிகளில் ஹைதராபாத்தில் மாநில அரசு, தெலங்கானா எழுச்சிக்கான உலகளாவிய உச்சி மாநாடு நடத்துவதையும் உறுதி செய்திருக்கிறது.

இந்த ‘USISPF’ மாநாட்டில் பேசியிருக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட ‘பாரத் ஃபியூச்சர் சிட்டி’ ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது. அது இந்தியாவிலேயே மேம்பட்ட நகரமாக இருக்கும்.
இந்தியாவில் இருக்கும் சாலைகளுக்குப் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பெயர்களே வைக்கப்படுகின்றன. அந்த வழக்கத்தை மாற்றியமைத்து, ஹைதராபாத் சாலைகளுக்கு கூகுள், மெட்டா, டிசிஎஸ் (TCS) என போன்ற நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்படும். இது ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிறுவனங்களை கெளரவிக்கும் செயலாகும்” என்று கூறியிருக்கிறார்.
ஹைதராபாத் சாலைகளுக்கு கார்பரேட் நிறுவனங்களின் பெயர் வைக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த பெயர் மாற்ற திட்டம் பற்றிய உங்களின் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.
