
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளைப் பெற்று வீராங்கனை இளவேனில் வாலறிவன் சாதனை பெற்றுள்ளார்.
2019-ல் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற இளவேனில் தற்போது தங்கம் வென்று அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

