Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2025
in அரசியல் செய்திகள்
0
Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" – மு.க.ஸ்டாலின் அறிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.

டெல்லி

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சூழலை ஆராய்ந்து வருகின்றனர்.

Delhi Blast: ஸ்டாலின் வேதனை

இந்த சூழலில் வாகன வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பறித்ததால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

மு.க.ஸ்டாலின்

அங்கிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன. இழப்பைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களையும், காயங்களுடன் போராடுபவர்களுக்கு எனது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வலிமை மற்றும் விரைவான குணமடைதலுக்காக வேண்டுகிறேன்.” என எழுதியிருக்கிறார்.

டெல்லி வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலும் கோவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் சோதனை
சென்னையில் சோதனை
சென்னையில் சோதனை
சென்னையில் சோதனை
சென்னையில் சோதனை

கோவை நகர காவல் ஆணையர் A சரவண சுந்தர், “வழக்கமாக இரவு ரோந்து பணியில் 300 காவலர்கள் ஈடுபடுவார்கள். இன்று 600 ஆக உயர்த்தியிருக்கிறோம். நகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; சென்னையில் பாதுகாப்பு சோதனை | Live



.

Previous Post

Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ் | இந்தியா

Next Post

செங்கோட்டை கார் வெடிகுண்டு விபத்து; உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செங்கோட்டை கார் வெடிகுண்டு விபத்து; உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் | இந்தியா

செங்கோட்டை கார் வெடிகுண்டு விபத்து; உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In