Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: “நேற்றைய மாலை விருந்தில்" – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2025
in அரசியல் செய்திகள்
0
கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: “நேற்றைய மாலை விருந்தில்" – கமல்ஹாசன் நெகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டவர்.

என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருந்தார்.

View this post on Instagram

இந்த நிலையில், நேற்று மாலை நடிகரும், மக்கள் நீதிமய்யத் தலைவருமான கமல்ஹாசனின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கு நன்றி.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமதி. கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது.

நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “முதல்வர் செய்வது டிராமா” – கு.பாரதி பேட்டி





.

Previous Post

Seeman:“அன்புச் சகோதரர் திரு. சீமான்” – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து | “Dear Brother Mr. Seeman” – Edappadi Palaniswami wishes |

Next Post

ஆம்னி பேருந்துகளைச் சிறைபிடித்து ரூ.70 லட்சம்வரை அபாரதம்; கேரள மோட்டார் வாகனத் துறை அதிரடி | The Kerala Motor Vehicles Department has seized Tamil Nadu Omni buses and imposed a fine of up to Rs. 70 lakh.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம்னி பேருந்துகளைச் சிறைபிடித்து ரூ.70 லட்சம்வரை அபாரதம்; கேரள மோட்டார் வாகனத் துறை அதிரடி | The Kerala Motor Vehicles Department has seized Tamil Nadu Omni buses and imposed a fine of up to Rs. 70 lakh.

ஆம்னி பேருந்துகளைச் சிறைபிடித்து ரூ.70 லட்சம்வரை அபாரதம்; கேரள மோட்டார் வாகனத் துறை அதிரடி | The Kerala Motor Vehicles Department has seized Tamil Nadu Omni buses and imposed a fine of up to Rs. 70 lakh.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In