நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன், “எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
