2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.
ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான அதிகார சண்டைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால் தேர்தலை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாமக.

இதுகுறித்து இன்று (நவ 6), விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணி அரசியல் செய்ய விரும்பினால் தனியாக கட்சியை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், “பாட்டாளி மக்கள் கட்சி’யின் பெயரையும், என் பெயரையும் உபயோகப்படுத்தக் கூடாது.
