Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

SIR | கேரளாவில் படிவம் வழங்கச் சென்ற அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. முகம் கழுத்தில் ஏற்பட்ட காயம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2025
in அரசியல் செய்திகள்
0
SIR | கேரளாவில் படிவம் வழங்கச் சென்ற அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. முகம் கழுத்தில் ஏற்பட்ட காயம்! | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 06, 2025 3:51 PM IST

கோட்டயத்தில் வாக்காளர் பட்டியல் பணியில் சென்ற மெர்சி ஜோசப்பை வீட்டின் நாய் கடித்ததால் முகம் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

News18
News18

கேரள மாநிலம், கோட்டயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற அதிகாரி மெர்சி ஜோசப்பை வீட்டின் வளர்ப்பு நாய் கடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.

இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்டித்து பேரணி நடத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணியைத் துவக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய படிவத்தை இந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வழங்கிவருகின்றனர்.

#WATCH | Kerala: A BLO (Booth Level Officer) suffered injuries on her face and neck after she was allegedly attacked by a pet dog when she visited a house in Kottayam to give out Enumeration Forms as a part of SIR (Special Intensive Revision). She claims that the house owner… pic.twitter.com/SBguCAv3aJ


— ANI (@ANI) November 6, 2025

அந்த வகையில், கேரளா மாநிலம், கோட்டயத்தில் வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் என்பவர் அவரது வாக்குச் சாவடி உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கோட்டயத்தில் ஒரு வாக்காளர் வீட்டிற்கு படிவத்தைக் கொடுக்க வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய், மெர்சி ஜோசப் முகம் மற்றும் கழுத்தில் கடித்துள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், தான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் உரிமையாளர் தான் வளர்க்கும் நாயை ஏவிவிட்டு தன்னைக் கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 3:51 PM IST



.

Previous Post

புதிய பீகாருக்கு தேஜஸ்வி தலைமையிலான அரசு முக்கியம்; பீகார் மக்களிடம் லாலு யாதவ் கோரிக்கை | Tejashwi-led government is important for new Bihar; Lalu Yadav’s request to the people of Bihar

Next Post

“அன்புமணிக்கும் பாமகவிற்கும், எந்த சம்பந்தமுமில்லை” – பாமக ராமதாஸ் உறுதி | “There is no connection between Anbumani and PMK” – PMK’s Ramadoss confirms

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அன்புமணிக்கும் பாமகவிற்கும், எந்த சம்பந்தமுமில்லை” – பாமக ராமதாஸ் உறுதி | “There is no connection between Anbumani and PMK” – PMK’s Ramadoss confirms

"அன்புமணிக்கும் பாமகவிற்கும், எந்த சம்பந்தமுமில்லை" - பாமக ராமதாஸ் உறுதி | "There is no connection between Anbumani and PMK" - PMK's Ramadoss confirms

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In