சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, ‘தவெகவின் மேடையில் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார் என ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைதான். ஆனால், அதை மேலோட்டமாக பார்த்தால் நிதர்சனத்தை உணர முடியாது.
ஸ்டாலின் ஒன்றும் இவர்களைப் போல ஒரு மாதமாக தொடர்புகொள்ளவே முடியாத அளவுக்கு தலைமறைவாகவில்லை. அவர் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்.
தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். கட்சிக்காரர்களுடனும் தொடர்பில்தான் இருந்தார்.

அப்போது இருந்த சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேம்பால வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் கலைஞரையும் ஸ்டாலினையும் ஜெயலலிதா கைது செய்ய நினைத்தார்.
கலைஞரை கைது செய்த பிறகுதான் ஸ்டாலினை கைது செய்ய விரைகிறார்கள். ஸ்டாலின் அப்போது ஊரில் இல்லை. ஒருவேளை ஸ்டாலின் சிக்கியிருந்தால், கலைஞரையும் ஸ்டாலினையும் காலி செய்து விட்டு திமுகவை காணாமல் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது.
இதையெல்லாம் உணர்ந்துதான் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார்.
