தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டும் இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றிருக்கிறது.
இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
