சசிகலா போலவே நானும் சொல்கிறேன் வெயிட் அண்ட் சீ…, இவர்களின் வாழ்க்கை மூன்று மாதங்களில் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துப் பாருங்கள், எடப்பாடி பழனிசாமி வசம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர், சசிகலா, டிடிவி உள்ளிட்டவரிடம் ஒரு எம்எல்ஏவாது உள்ளார்களா?
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு துரோகிகள் தான் காரணம், சசிகலா, டி.டி.வி போன்ற துரோகிகளால் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தோம், அதிமுகவிலுள்ளவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வழியில் செயல்பட்டு வருகிறோம்.

திமுக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஐயாயிரம் ரூபாயை கொள்ளை அடிக்கிறது, ஆகவே கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் மக்களிடம் அதிருப்தி உள்ளது, மெகா கூட்டணி அமைத்தாலும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற முடியாது.
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற துரோகிகளை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற முடிவில் இருக்கிறோம், துரோகிகள் நீக்கப்படுவதால் நாங்கள் பலவீனமாக இல்லை, பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் வந்திருக்க வேண்டும்.
அதிமுகவில் செங்கோட்டையன் ராஜாவாக இருந்தார், ஆனால், துரோகிகளிடம் சேர்ந்து கூஜா தூக்கச் சென்றுள்ளார், பதவியில் இருந்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும். பதவியை விட்டுச் செல்கிறேன் என்றால் யாரும் கவலைப்பட மாட்டார்கள். அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருப்பார்கள், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மிகப்பெரிய சக்தி வந்துள்ளது என நினைத்துக் கொண்டுள்ளனர், உண்மையில் பிரிந்து சென்றவர்களுக்கு எந்த ஒரு சக்தியும் இல்லாமல் அந்துபோய் கிடக்கிறார்கள்,
