Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்.. பெற்ற தாய்க்கு எமனான மகன்.. ஓட ஓட விரட்டி கொலை செய்த சிறுவன்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2025
in அரசியல் செய்திகள்
0
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்.. பெற்ற தாய்க்கு எமனான மகன்.. ஓட ஓட விரட்டி கொலை செய்த சிறுவன்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 24, 2025 9:10 AM IST

கணவருடன் விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு, 11 ஆம் வகுப்பு படிக்கும் மகனே எமனானது ஏன் என்று பார்க்கலாம்..

கொலை செய்யப்பட்ட தாய்
கொலை செய்யப்பட்ட தாய்

ஹரியானாவில் பெற்ற தாயை மகனே ஓட ஓட விரட்டி கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெய் பகவான் – முகேஷ். இந்த தம்பதியின் மூத்த மகன் வெளிநாட்டில் படிக்கும் நிலையில், 11 ஆம் வகுப்பு படித்த இளைய மகன் மட்டும் அவர்களுடன் இருந்துள்ளார். அண்மைக் காலமாக தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

முகேஷ் மட்டும் தனியாக வசித்து வந்த சூழலில், அவரின் இளைய மகன் தந்தையுடன் தங்கியுள்ளார். பின்னர், தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியாக வசித்து வந்த முகேஷ், கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்து அன்று முகேஷின் இளைய மகன் அவரின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

அப்போது, தாய் – மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மகன், கோடாரியை எடுத்து தாயை தாக்க பாய்ந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முகேஷ் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற மகன், அவரை கோடாரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், விவாகரத்து பெற்ற முகேஷுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதை அறிந்த மகன், அவரை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், சிறுவனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையிடம் இருந்து விவாகரத்து பெற்ற தாயை, 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 24, 2025 8:48 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்.. பெற்ற தாய்க்கு எமனான மகன்.. ஓட ஓட விரட்டி கொலை செய்த சிறுவன்!



.

Previous Post

Silicon Valley: பாலுறவை கருவியாக்கும் சீன உளவாளிகள்; அமெரிக்காவுக்கு அதிகரிக்கும் ஆபாயம்! | US Intelligence Warns: China and Russia Using ‘Sexpionage’ as a New Age Spy Weapon

Next Post

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ – புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ – புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In