Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாடிக்கையாளருடன் தகராறு… வீட்டை தாக்கிய பிளிங்கிட் பணியாளர்கள்…! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2025
in அரசியல் செய்திகள்
0
வாடிக்கையாளருடன் தகராறு… வீட்டை தாக்கிய பிளிங்கிட் பணியாளர்கள்…! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 16, 2025 7:35 PM IST

போபாலில் பணம் செலுத்துவது தொடர்பான தகராறு வன்முறையாக மாறி, 50க்கும் மேற்பட்ட பிளிங்கிட் டெலிவரி பணியாளர்கள் ஒரு வீட்டில் புகுந்து அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Rapid Read
News18News18
News18

போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்-ஐ சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டெலிவரி பணியாளர்கள், ஒரு குடியிருப்பில் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் டேனிஷ் ஹில்ஸ் காலனியில் நடந்ததாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனை, ஒரு வாடிக்கையாளருக்கும், டெலிவரி பணியாளருக்கும் இடையே ஆர்டரைப் பெறுதல் மற்றும் பணம் செலுத்தல் தொடர்பான சிறிய தகராறாகத் தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே அது வன்முறையாக மாறி, பலர் காயமடையும் அளவுக்கு வளர்ந்தது.

சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த தகராறுக்குப் பிறகு சுமார் 60 பிளிங்கிட் டெலிவரி பணியாளர்கள் ஒரே நேரத்தில் அங்கு கூடி, கோஷங்கள் எழுப்பி, உள்ளூர்வாசிகளுடன் மோதிக்கொண்டனர். சண்டை வேகமாக பரவியதால் நிலைமை கைமீறியது. மேலும், இந்த சம்பவத்தில் சில பெண்கள் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், சிலரின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு, டேனிஷ் ஹில்ஸ் காலனியின் குடியிருப்பாளர்கள் கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், அந்தப் பகுதிக்கு வெளியே இருந்துவந்த பல டெலிவரி பணியாளர்களும் இதில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அழகில் மட்டுமல்ல, வருமானத்திலும் அசத்தல்…! காதல் சின்னமான தாஜ்மஹாலின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா…?

இது ஒருபுறம் இருக்க, பிளிங்கிட் நிறுவனத்தின் பெயரை மீண்டும் சர்ச்சையில் ஆழ்த்தும் மற்றொரு சம்பவமும் கடந்த வாரம் நிகழ்ந்தது. தனது வீட்டிற்கு டெலிவரி செய்ய வந்த பிளிங்கிட் டெலிவரி பார்ட்னர் தன்னை “தகாத முறையில்” தொட்டதாக பெண் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அவர் அந்தச் சம்பவத்துக்கான சிசிடிவி காட்சியையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “இது ஏற்றுக்கொள்ள முடியாதது, பிளிங்கிட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 16, 2025 7:35 PM IST



.

Previous Post

தமிழ் அதிகாரிகளின் நேர்மையை சந்தேகப்படுகிறதா உச்ச நீதிமன்றம் – சீமான் கேள்வி | Seeman condemns suprem court on karur stampede

Next Post

“விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?” -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில் | AIADMK Rajendra Balaji responding on ADMK – vijay TVK alliance

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?” -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில் | AIADMK Rajendra Balaji responding on ADMK – vijay TVK alliance

"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில் | AIADMK Rajendra Balaji responding on ADMK - vijay TVK alliance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In