தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்
மேலும், “ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவதூறு பரப்பி அவமதித்தது அம்மாநில பாஜக. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கட்சி என்று கூறிக்கொண்டு இனப்பாகுபாடு காட்டி அவமதித்த பாஜகவின் பொய் குற்றச்சாட்டிற்குச் சற்றும் குறைவில்லாதது தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுமாகும்” என்றும்
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்யவேண்டும்” என்றும் அறிக்கை மூலம் கூறியிருக்கிறார் சீமான்.
