கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும்” என்றனர்.

காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், “கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை” என முடித்துக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
